உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்

மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்

சென்னை: பெங்களூரில் இருந்து விமானத்தில் சென்னை எடுத்து வரப்பட்ட நுரையீரல், மீனம்பாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.,க்கு மெட்ரோ ரயிலில் நேற்று, பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் தரப்பட்ட நுரையீரல், சென்னை மெட்ரோ ரயிலில் முதல் முறையாக எடுத்து வரப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து, 'ஏர் ஆம்புலன்ஸ்' வாயிலாக நுரையீரலை எடுத்து வந்த மருத்துவ குழுவினர், விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2:07 மணிக்கு, மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். பின், சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்கள் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக்குழுவினர் மெட்ரோ ரயிலில் ஏறி, ஏழு நிலையங்களை கடந்து, 2:28 மணிக்கு, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வாயிலாக, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

VSMani
நவ 09, 2025 16:08

நிச்சயமாக நுரையீரல் மாற்றப்பட்ட நபர் கோடீஸ்வரனாகவோ அல்லது அரசியல்வாதியாகாத்தான் இருப்பார். இந்த மாதிரி உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஏழைகளுக்கு எட்டாத நெல்லிக்கனிதான்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 06:57

இதைவிட அப்பல்லோ ஆஸ்பத்திரி மாடியில் ஏர் ஆம்புலன்ஸ் இறங்கு தளம் ஒன்றை அமைக்கலாமே .ஒருவேளை பணம் இல்லையோ ?


Gnana Subramani
நவ 09, 2025 09:35

ஆளுநர் மாளிகை, விமானப் படை பயிற்சி பள்ளி அருகில் உள்ளதால் தனியாருக்கு ஹெலிகாப்டர் தளம் அமைக்க அனுமதி கிடையாது


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 13:13

திரு. ஞான சுப்பிரமணி அவர்களே, தகவலுக்கு நன்றி. ஆனால் எதிர்காலத்தில் தேவைகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் அனைத்து கார்ப்பரேட் மருத்துவ மனைகளிலும் நிபந்தனைகளுக்குட்பட்ட ஹெலிபேட் அமைக்க அனுமதி தரலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை