உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?

மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவில் நேற்றுமுன்தினம் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் சமயத்தில் இருவர் இறந்த விவகாரத்தில் 'கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை' என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.அவர்கள் தெரிவித்துள்ளதாவது: வி.ஐ.பி., பாஸ் உடன் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து முத்தையா நகர் பூமிநாதன் 64, மனைவி இந்திரா, இரு உறவினர்களுடன் அதிகாலை 4:05 மணிக்கு வி.ஐ.பி., பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது பூமிநாதனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். உடனடியாக 4:10 மணிக்கு, தயார் நிலையில் இருந்த '108' ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஜவுளிக்கடையில் கடையில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் மருத்துவக்குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் ஆம்புலன்ஸ் செல்வதற்கான பிரத்யேக பாதையில் அழைத்துச்செல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் வரும் வழியில் பூமிநாதன் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர். இவர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை.அன்று காலை யானைக்கல் புதுப்பாலம் 4வது துாண் கீழ் ஒருவர் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் செல்லுார் அகிம்சாபுரம் மாரிக்கண்ணன் 42, எனத்தெரிந்தது. இவர் 3 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து கிடைக்கும் இடங்களில் உணவு உண்டும், நினைத்த இடத்தில் உறங்கியும் வந்துள்ளார். இவரும் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை. இவரது இறப்பிற்கும், சித்திரைத்திருவிழாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balakumar V
மே 14, 2025 09:29

பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்த முறையான முன்னேற்பாடுகள் ஏதும் இல்லை. ஆக்கிரமிப்பு கடைகள், கட்டுப்பாடற்ற வாகனங்கள் போக்குவரத்து மேற்படி திருவிழா நாட்களில் காணப்பட்டது. மகாமகம் நிகழ்வின் போது கடைப்பிடிக்கப்பட்ட ஒரு வழிப்பாதை முறை, ஆக்கிரமிப்பற்ற சாலைகள், போக்குவரத்து ஒழுங்குமுறை தேவை. சிறப்பு உயர் அதிகாரிகள் இதற்காக நியமிக்கப்பட்ட வேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 14, 2025 08:52

காவல்துறையின் பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை என்ற இந்த தன்னிலை விளக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதேபோல ஆங்காங்கு நடக்கும் கொலை, கொள்ளை, போதைமருந்து விற்பனை, மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் காவல்துறையின் நடவடிக்கைகள் தரமாக இல்லை என்றும் தன்னிலை விளக்கம் அளிப்பார்களா?


sundarsvpr
மே 14, 2025 08:32

கூட்ட நெரிசலால் சாவுகள் என்றாலும் அரசினை குறைகூறுவது நியாயம் இல்லை. திருமால் தன திருமேணி அழகை காட்டிட இரங்கி வருகிறார். நாம் முந்தி அடித்து சென்று அவதிப்பட வேண்டும். சுய கட்டுப்பாடு இல்லையெனில் ஆண்டவனாலும் காப்பாற்ற இயலாது. அமைதியாய் செவிப்பதற்கும் கூட்ட நெரிசலில் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. இதுபோன்ற இடங்களில் சாவிற்கு நிர்வாகத்தை குறை சொல்லக்கூடாது.


Mani . V
மே 14, 2025 06:55

அந்த நாய் சேகர் ஸாரி சேகர் பாபு ஆசைப்பட்டது மாதிரியே நடந்து விட்டது.


c.mohanraj raj
மே 14, 2025 06:49

உலகத்திலேயே கேவலமான எஃப் ஐ ஆர் போட்டவர்கள் ஆயிற்று இவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி விஷயத்தில் இதெல்லாம் இவர்களுக்கு சாதாரண மாக இருக்கும் திராவிட மாடலில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை