உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைதியை பராமரிக்கவே தடை உத்தரவு மதுரை கலெக்டர் சங்கீதா விளக்கம்

அமைதியை பராமரிக்கவே தடை உத்தரவு மதுரை கலெக்டர் சங்கீதா விளக்கம்

மதுரை: 'திருப்பரங்குன்றத்தில் வெளியூர் நபர்களால் பொது அமைதிக்கு பாதிப்பு வராமல் இருக்கவும், மதநல்லிணக்கம் பேணுவதற்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது' என மதுரை கலெக்டர் சங்கீதா விளக்கம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: டிச. 4ல் திருப்பரங்குன்றம் பழநியாண்டவர் கோயில் தெருவில் புதிதாக மலைமேல் உள்ள தர்காவில் கந்துாரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் மேற்கண்ட வாசகம் நீக்கப்பட்டது.டிச.25 காலை 9:00 மணிக்கு கந்துாரி (ஆடு பலியிடுதல்) கொடுக்க 5 பேர் அங்கு சென்றபோது போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைத் தொடர்ந்து முஸ்லிம் சமுதாயத்தினர், கலெக்டரிடம் முறையிட்டனர். இதையடுத்து டிச.31ல் திருமங்கலம் ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி கூட்டம் நடந்தது.

வழக்குப்பதிவு

இதில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகளை இந்த ஆண்டிலும் தொடரவும் மலைமீது கந்துாரி கொடுக்கும் நடைமுறை தொடர்பாக, ஆவணங்களை தர்கா, ஹிந்து அறநிலையத் துறையினர் சமர்ப்பிக்கவில்லை என்பதால், நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டும் முடிவு செய்யப்பட்டது.ஆனால் இந்த தீர்மானங்களை ஏற்க மறுப்பு தெரிவித்து திருப்பரங்குன்றம் தர்கா, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் சென்றுவிட்டனர். ஜன. 18ல் ஹிந்து முன்னணி அமைப்பினர் 200 பேர், மாநிலதலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., கட்சியினருடன் திருப்பரங்குன்றத்தில் கூட்டம் நடத்தி, அனுமதி பெறாமல் கோயில் வந்து திரும்பியபோது, அவர்களுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அமைதிக் கூட்டம்

கலெக்டரிடம் ஜன.27 அன்று அனைத்து கட்சி நிர்வாகிகள், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 11 பேர், தங்கள் கிராமத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளிநபர்கள் யாரும் தங்கள் ஊர் நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகளில் தலையீடு செய்யாமல் இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர்.அதனடிப்படையில், திருமங்கலம் ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதிக் கூட்டம் ஜன.30 ல் நடந்தது. இதில், பா.ஜ., தவிர அ.தி.மு.க, உட்பட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

தடை உத்தரவு

'திருப்பரங்குன்றத்தில் இருசமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை (தனிப்பட்ட முறையில் கந்துாரி கொடுப்பதை) தொடர்ந்து பின்பற்றவும், அதில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர். அ.தி.மு.க., பிரதிநிதி மட்டும் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இச்சூழலில் பிப்.2 அன்று ஹிந்து முன்னணியினர் 'மலையை காப்போம், திருப்பரங்குன்றம் புனிதம் காப்போம்' என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவுக்கு போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் சமூகத்தை அழைத்து, மலையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு செய்திகளை பதிவேற்றி வந்தனர்.ஹிந்து முன்னணி உட்பட ஹிந்து அமைப்புகள் மாவட்டத்தின் பிறபகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகியவற்றில் இருந்தும் பல்வேறு கட்சி நபர்களையும் திரட்டி திருப்பரங்குன்றம் கோயில் முன்புள்ள 16 கால் மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய தயாராகினர். எனவே மதநல்லிணக்கத்தை பேணவும், அசாதாரண சூழலை தவிர்க்கவும் பொது அமைதியை பாதுகாக்க மதுரை நகர், மாவட்டம் முழுவதும் வெளியூர் நபர்கள் யாரும் பிரவேசிக்காத வகையில் பிப்.3 காலை 6:00 மணி முதல் பிப்.4 இரவு 12:00 மணி வரை 2 நாட்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நடவடிக்கை

போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து சில ஹிந்து அமைப்பினர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தொடர்ந்த வழக்கின் உத்தரவில், பழங்காநத்தம் சந்திப்பில் பிப்.4, மாலை 5:00 முதல் மாலை 6:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. அதன்படி அப்பகுதியில் தேவையான பாதுகாப்பு அளித்து, மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கலைந்து சென்றனர்.திருப்பரங்குன்றம் கிராம பகுதியைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும், மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் வசிக்கின்றனர். ஆனால் வெளியூரைச் சேர்ந்த இருதரப்பைச் சேர்ந்தவர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பதை கட்டுப்படுத்தவும், பொது அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தை பேணவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

rama chandran
பிப் 08, 2025 12:16

கலைக்டர் அம்மா ஆரம்பமுதல் உங்கள் அணுகுமுறை சரிஇல்லை . முதலில் யார் பிரச்னையை தொடங்கினர் உங்களுக்கே வெளிச்சம் , போலியான அணைத்து கட்சி மனுக்கொடுக்க வந்தார்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்று மனுவை ஏற்றீர்கள் அப்பாவை சாமானியனுக்கு தெரிந்து உங்களின் நேர்மை. நீங்கள் வைக்கும் பணிக்கு நீங்கள் நடந்துகொண்ட விதம் பொதுமக்களாகிய எங்களுக்கு ஆசிரியத்தை ஏற்படுத்தியது.


karthik
பிப் 07, 2025 10:35

பார்ரா கிளிப்பிள்ளை சொல்லி கொடுத்ததை சரியாக சொல்கிறது... ஒன்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை துரத்தி வீட்டுச்சாம்.. அது மாதிரி எப்படியோ ஒரு தர்ஹாவை கட்ட விட்டுவிட்டார்கள் முன்னோர்கள்.. சரி அதோடு இருந்துவிட்டு போகட்டும் என்று பார்த்தால் மொத்த மலையுமே சிக்கந்தர் மலை அது எங்களுக்கு தான் சொந்தம் என்று சொல்லு ஆடையும் கோழியையும் பலிகொடுக்க சென்றவர்களை தடுக்க வக்கில்லை.. தூண்டியவர்கள் அவர்கள் அவர்களை அடக்க வக்கில்லை .. இந்துக்கள் இளிச்சவாயர்கள் அதனால் தடை உத்தரவு


Barakat Ali
பிப் 06, 2025 21:48

அரசு ஊழியர்கள் பொய்த்தகவலைக் கொடுத்தால் சட்டப்படி குற்றம் ....... அம்மையாருக்கு அந்த விஷயம் தெரியுமா ???? தெரியாதா ????


Barakat Ali
பிப் 06, 2025 21:45

விளக்கத்தை இந்த அம்மையார் வாய்மொழியாகச் சொன்னாரா ???? எழுத்து மூலம் அறிக்கையாகக் கொடுத்தாரா ???? திராவிடியாள் மாடல் நாற்றம் குடலைப் புரட்டுகிறதே ????


Jayapal Annamalai
பிப் 06, 2025 13:36

மூஞ்சிய பாத்தாலே தெரியுது இது கலெக்டர் அறிக்கை இல்லை என்று.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 06, 2025 12:19

இந்த அறிக்கை கூட அறிவாலயத்து ஆர் எஸ் பாரதி எழுதிக் கொடுத்த மாதிரியே இருக்கு


கல்யாணராமன் சு.
பிப் 06, 2025 12:10

\கலெக்டரிடம் ஜன.27 அன்று அனைத்து கட்சி நிர்வாகிகள், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 11 பேர் ... \ அந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 11 பேர்களின் பெயரை வெளியிடவேண்டும் .... எல்லோருக்கும் தெரியும் அந்த அனைத்து கட்சிகள் எவையென்று ...


கல்யாணராமன் சு.
பிப் 06, 2025 12:07

இது மாவட்ட கலெக்டருடைய அறிக்கையா, இல்லை திருடர்கள் முன்னேற்ற கழகத்துடைய , மற்றும் அதன் அல்லக்கை கட்சிகளுடைய அறிக்கையா என்பதை விளக்கினால் நல்லது ...


அப்பாவி
பிப் 06, 2025 11:22

அந்த நவாஸ் பழம் மலை மேலே கவிச்ச பிரியாணி சாப்பிட்ட போது எங்கே போயிருந்தீங்க தாயி


தேவராஜன்
பிப் 06, 2025 10:59

ஆத்தா தாயி, நவாஸ் கனி பிரியாணி கொட்டிக்கச் சென்ற போது எங்கே போய் விட்டீர்கள்? அப்போது 144 தடைச் சட்டம் இயற்ற படவில்லையா அல்லது உங்களுக்கு ஞாபக மறதியா?


புதிய வீடியோ