உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கசாப்பு கடைக்காரருக்கு மகாவீரர் விருது; விமர்சனத்தால் விழா அனுமதியை ரத்து செய்தது மியூசிக் அகாடமி!

கசாப்பு கடைக்காரருக்கு மகாவீரர் விருது; விமர்சனத்தால் விழா அனுமதியை ரத்து செய்தது மியூசிக் அகாடமி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டி.எம்.கிருஷ்ணாவிற்கு விருது வழங்கும் முடிவை விமர்சனம் செய்த காரணத்தால், துக்ளக் ஆண்டு விழாவிற்கு வழங்கியிருந்த அனுமதியை சென்னை மியூசிக் அகாடமி ரத்து செய்துள்ளது. இந்த முடிவு, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான, 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்தது. இந்த விருதுடன் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பெயரில் வழங்கப்படும் விருது தொகையான ரூ.1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கும் மியூசிக் அகாடமியின் முடிவு, கர்நாடக இசை கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த முடிவை விமர்சனம் செய்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதி இருந்தார்.கசாப்பு கடைக்காரருக்கு, கருணையே உருவான பகவான் மகாவீரர் பெயரில் விருது வழங்குவதைப் போன்றது என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு எப்படி அவரது பெயரில் விருது வழங்கலாம் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதே கேள்வியை எழுப்பி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியை, டி.எம்.கிருஷ்ணா விமர்சித்த விதத்தை கட்டுரையில் சுட்டிக்காட்டிய குருமூர்த்தி, கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது எனக்கூறியதுடன், மியூசிக் அகடமி இசைப் பாரம்பரியத்தில் இருந்து விலகிப் போவதையே இந்த விருது தேர்வு காட்டுகிறது எனவும் விமர்சித்து இருந்தார்.இந்நிலையில், இந்த கட்டுரை வெளியான நாள் அன்றே, குருமூர்த்தியை தொடர்பு கொண்ட மியூசிக் அகடமி நிர்வாகம், 2025 ஜன., 14ம் தேதி துக்ளக் ஆண்டு விழாவை அரங்கத்தில் நடத்த வழங்கிய அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர். துக்ளக் நாளிதழின் ஆண்டு விழா கடந்த 10 ஆண்டுகளாக மியூசிக் அகடமியில் தான் நடந்து வந்தது. தற்போது அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் இந்த விழா நாரதகான சபாவில் நடக்கும் என குருமூர்த்தி அறிவித்து உள்ளார். விருது தொடர்பான விமர்சனத்திற்கு பழிவாங்கும் வகையில் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

sundarsvpr
அக் 24, 2024 13:56

நாய்க்கு ரொட்டி துண்டை போட்டால் ஓடி வரும். போடுவது தாராளகுணம். ஓடி வருவது நாயின் இயல்வு. இதனை விமர்சிக்கமுடியாது. ஆறு அறிவு கொண்டவன் மனிதன். 5 அறிவு உள்ள மனிதர்கள் உள்ளார் என்பதனை மறுக்கமுடியாது. இந்த விமர்சனத்தை அவ்வாறுதான் கருதுவது நல்லது.


V GOPALAN
அக் 18, 2024 19:18

மியூசிக் அகாடெமி மற்றும் ஹிந்து பேப்பர் பிசினெஸ்ஸையும் சூரிய குடும்பம் கீழ் வந்துவிட்டது இனி எல்லா ஆட்டமும் இங்குதான் நடக்கும்


சாண்டில்யன்
அக் 19, 2024 17:25

இந்த செய்திக்கு Dr Lion சேகரின் கருத்தை காண்க


vbs manian
அக் 18, 2024 15:41

அகாடமி அதலபாதாளம்.


Saravanaperumal Thiruvadi
அக் 18, 2024 11:27

குருமூர்த்தியின் விமர்சனம் எல்லை கடந்து உள்ளது குருமூர்த்திக்கு பிடிக்காத நபர் என்பதற்காக அவர் இவ்வாறு பேசுவது ஏற்கதக்கது இல்லை ஆடிட்டர் அவர் வேலையை ஒழுங்காக பார்ப்பது நல்லது இது போன்ற கெடு புத்தி நபர்களை மியூசிக் அகாடமி ஒதுக்கி வைத்தது நன்றே.


KavikumarRam
அக் 18, 2024 18:18

குருமூர்த்தி விமர்சனத்தில் என்ன தவறு. தமிழக உதல்வர் ஒரு ஐன்ஸ்ட்டின் அப்படின்னு சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா???


Mahadevan Ramanan
அக் 18, 2024 09:46

கிருஷ்ணா அவர்கள் குருமூர்த்தியின் கம்யூனிட்டியில் இருந்திருந்தால் வாழ்த்தி இருப்பார்.


R K Raman
அக் 18, 2024 10:39

க்ருஷ்ணா அவரது இனம்தான். விஷயம் தெரிந்து கொண்டு கருத்து சொல்லலாம்...200 க்காக கூலிக்கு.... அடிக்க வேண்டாம்


Palanisamy Sekar
அக் 19, 2024 10:47

200 ரூபாய் வந்ததுமே ஏதாச்சும் தத்து பித்துன்னு உளரிடவேண்டியது, அப்புறமா நன்னா வாங்கி கட்டிக்கிட்டு வேண்டியது.


சாண்டில்யன்
அக் 19, 2024 17:09

இப்போ மகாகவி என்று சொந்தம் கொண்டாடுவோர் அவர் வாழ்நாளில் பாரதியையே ஒதுக்கி வைத்த இனமாச்சே பாரதி பாஞ்சாலி சபதம் விலாவாரியா எழுதினார் அதை இவர்கள் பொன்னியின் செல்வனை சினிமாவாக எடுத்ததைப் போல எடுப்பார்களா? அவர் போனபோது எத்தனை பேர் திரண்டார்களாம்? இந்த கிருஷ்ணா எம்மாத்திரம் இவர்கள் சண்டையை நாம் வேடிக்கை பார்த்து சந்தோஷிக்கலாம் அவ்வளவே


சாண்டில்யன்
அக் 19, 2024 17:13

EWS ராமன் பைசா ஆதாயம் இல்லாமதான் கருத்து போடுவார் தியாக சீலர்


kantharvan
அக் 24, 2024 12:07

RK ராமன் அண்ணா, ஒருவன் கொண்ட கொள்கையே அவனை அடையாளபடுத்த முடியும் பிறப்பு மட்டும் அல்ல என்பதை நன்கு அறிந்ததனாலே மஹாதேவன் ரமணன் அவரை அவாள அல்ல என்கிறார். TM கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தை பொதுப்படுத்துவதன் மூலம் அதற்கு நீர் பாய்ச்சவே செய்கிறார் நீங்கள் தனி படுத்தினால் அந்த சமஸ்கிருதம் போலவே செத்து விழும். அப்புறம் எத்தனை கோடியை கொட்டினாலும் உயிர்ப்பிக்க முடியாது.


Naga Subramanian
அக் 18, 2024 08:46

டீ.ம்.கிருஷ்ணா மற்றும் சுகி சிவம் இருவருமே திராவிட மாடலில் வந்தவர்கள்


சாண்டில்யன்
அக் 19, 2024 17:16

இருவருமே நல்ல ஞானம் பெற்றவர்கள் நீதியை ஆதாரத்துடன் பேசுபவர்கள் இன்னும் இந்த நாட்டில் பலரும் ............ அடிமைத்தளையிலிருந்து மீளவில்லையென தெரிகிறது


James Mani
அக் 17, 2024 22:11

லுக் ட்ரு


R S BALA
அக் 17, 2024 15:47

எனக்கு எதுவும் புரியல..போங்க.


Subash BV
அக் 17, 2024 13:29

Its natural, before awarding the award should check the background. If found guilty should be accepted. Not keep doing suitcases politics. AVOID SPOILING ACADEMY NAME


Rajagopalan Parthasarathy
அக் 17, 2024 11:29

Music academy name may be changed to Esu Academy. Persons from business, whose only business is to play politics, SHOULD NOT HOLD ANY POSITION IN MUSIC ACADEMY. THE same academy? miserably failed to honour genius Tanjore Kalyanaraman. SHAME ON THOSE WHO HELD IT.