ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யணும்
நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றி, ஆன்மிக மரபுகள், பாரம்பரிய வழிபாட்டு முறைகள் மற்றும் பக்தர்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை காலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவது, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதுகுறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை, அரசு சிறப்பாக செய்து வருகிறது. கல்வித் துறையில் ஊழல் செய்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற முன்னாள் அமைச்சர்கள் நேரு உள்ளிட்டோர் மீது, நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப்பதிவு செய்யாமல் முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஏமாற்றினர். தற்போதைய அரசு, இவ்வழக்குகளை தீவிரப்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். – அர்ஜுன் சம்பத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி