உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலேசியா டூ திருச்சி; விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு பறிமுதல்; சுங்கத்துறை நடவடிக்கை

மலேசியா டூ திருச்சி; விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு பறிமுதல்; சுங்கத்துறை நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. அதை கொண்டு வந்த பயணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nc1i1sxx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சோதனையில், மலேசியாவில் திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அணில் குரங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அணில் குரங்கு, அரிய விலங்கு ஆகும். அதை கொண்டு வந்த பயணிடம் விசாரணை நடந்து வருகிறது. கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தண்டவாளம்
ஜூன் 28, 2025 22:02

தமிழகத்தில் இந்த அணில் குரங்கு கடும் கிராக்கி‌.


Ramesh Sargam
ஜூன் 28, 2025 20:45

மலேஷியா விமான நிலையத்தில் எப்படி விட்டனர்?


புதிய வீடியோ