உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்: அறிவித்தார் வைகோ

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்: அறிவித்தார் வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மதிமுகவின் துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யாவுக்கும், பொதுச் செயலாளரான வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் மூண்டது. பரஸ்பரம் ஒவ்வொருவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=69vvrdmf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு கட்டத்தில் வைகோ தம்மை துரோகி என்று கூறியது குறித்து அதிருப்தி அடைந்த மல்லை சத்யா, சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், மல்லை சத்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்வதாக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பு;கட்சி விரோத நடவடிக்கைகளில் மல்லை சத்யா ஈடுபட்டு உள்ளார். கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து இருக்கிறது. எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்து இருக்கிறேன். அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அவர் என்னிடம் விளக்கம் அளிக்கலாம். இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.மதிமுக உடமைகள், ஏடுகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் மல்லை சத்யாவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

ரங்ஸ்
ஆக 20, 2025 21:12

குடும்ப கட்சியை எதிர்த்து அரசியல் செய்து தனது கட்சியை குடும்ப கட்சியாக மாற்றி, பரம்பரை குடும்ப கட்சிக்கே விற்று விட்டார்.


M Ramachandran
ஆக 20, 2025 20:30

வைக்கோவின் இது மதம் மாறுவதற்கு முன் உள்ள பெயர்.மாறிய பின் புதிய நாமகரணம் லூர்து சாமியோஆரோக்கிய சாமி யோ? அவர் அறிவித்தால்தெரியும். மதம்மாறினவருக்கு குடும்ப பாரம் எதற்கு ஒரு பாஸ்டராக மதபோராதகராக மாற தானே எண்ணம் வரணும் அதாவது வாங்கிய பணத்திற்கு கூவவேன்டும். மகனை பீடத்தில் உட்கார வைக்க வந்த ஆசையினால் தான் கட்சி பிரமுகர்களுடன் பிணக்கு வாக்கு வாதங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தோளில் பல்லக்கு தூக்கியவர்களுக்கு திருட்டு கட்சியை தலைவர் போல் ஆசைய வரலாமா? அந்த பதவிக்கு வர எவ்வளவு தில்லுமுல்லு செய்து மூத்த தலைவர்களை டில்லியில் தன் உச்சிமுகர்ந்த வாரிசு மூலம் போர்த்து குடுத்து ஓரம்போ ஓரம்போ யென்று தள்ளி நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார். அது போனால் உங்களால் முடியுமா? அது தான் காரணம்.


r ravichandran
ஆக 20, 2025 19:38

கட்சியில் மீதி உள்ளவர்கள் இருவர் மட்டுமே, ஒருவர் வைகோ, இன்னொருவர் துரை வைகோ.


சந்திரன்
ஆக 20, 2025 17:59

கடைசி விக்கெட்டும் காலி


அப்பாவி
ஆக 20, 2025 17:36

அன்புமணியோடு கைகோக்கலாமே சத்யா..


Vasan
ஆக 20, 2025 17:23

Udayanidhi, OPS, EPS, Thiruma, Seemaan, Vijay will not allow their successor to be from their family.


S.V.Srinivasan
ஆக 20, 2025 14:59

நீங்க இவ்வளவு தில்லாலங்கடி வேலை செய்தும், அவரு ஒரு ஆள்தான் விஸ்வாசமா இத்தனை நாளா க ட்சியில் இருந்தாரு அவரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டு அப்பனும் புள்ளையும் உக்காந்து என்ன பண்ண போறீங்க.


Arasu
ஆக 20, 2025 14:53

வைகோவை போல் ஒரு துரோகியை பார்த்ததே இல்லை ...மல்லை சத்யா ஒரு உண்மை தொண்டர்...பல ஆயிரம் கோடி சொத்துக்களை தன மகனுக்கு மாற்றி விட்டார்


Rajarajan
ஆக 20, 2025 14:50

புத்திர பாசத்தால் துரியோதன வம்சமே அழிந்த நிலையில், ம. தி..மு.க. எம்மாத்திரம். ??


Barakat Ali
ஆக 20, 2025 14:35

கொலைமுயற்சிப் பழி சுமத்தலையா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை