உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

வேலூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய விவகாரம் குறித்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த 4 மாத கர்ப்பணி ஒருவர், கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணித்து உள்ளார். ரயில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சென்ற போது, அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு, ஜோலார்பேட்டையில் ஏறிய ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த பெண் கூச்சலிட்டார். இதனால், இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1lfhwvsm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து, அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளவிட்டதாக புகார் எழுந்தது. அதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது கே.வி.குப்பம் அருகே பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இ.பி.எஸ்., கண்டனம்

அவரது அறிக்கை: கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். திராவிட மாடல் தி.மு.க., அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

மகளிர் ஆணையம் விசாரணை

இந்த வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட சம்பவம் குறித்து 3 நாட்களில் தமிழக போலீசார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவம், பெண்கள் பாதுகாப்பு குறித்து கவலையை எழுப்பி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ray
பிப் 08, 2025 12:18

இதுபோன்ற சமயங்களில் மின்னல் வேகத்தில் ஓடிவரும் இந்த தேசிய ஆணையம் மீனவர்களுக்காக ஓடிவர ஒரு ஆணையமும் இல்லையே காரைக்கால் மீனவர்களுக்காக இலங்கையில் உள்ள இந்திய பிரதிநிதி துரிதமாக நடவடிக்கை எடுக்கிறார் வெளியுறவுத்துறை கதறுகிறது இங்கே ஒரு கேள்வி அந்த காரைக்கால் மீனவர்கள் பிஜேபிக்குத்தான் ஒட்டு போட்டார்களா என்று அங்குள்ள ஒட்டுண்ணிகள் சொல்வார்களா


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
பிப் 07, 2025 20:36

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை ஓடும் ரயிலில் பெண்ணிடம் அத்துமீறல் போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கையிலே எப்பொழுதும் ஆயுதத்தை வைத்து கொள்ளும் சூழல் கூட ஏற்படலாம் போலிருக்கிறது.போதை பொருள்களை தடை செய்து மது விலக்கு அமலுக்கு வந்தால் சிறிதளவாவது பெண்களிடம் மரியாதயாக நடந்து கொள்வார்களோ என்னவோ.


RAMAKRISHNAN NATESAN
பிப் 07, 2025 20:24

பழைய குற்றவாளி ....... ஜாமீன் கொடுக்கும் நீதிபதிகளும் காரணம் ..... ஆதாரமில்லை என்று முடித்து வைக்கும் நீதிபதிகளும் காரணம் .....


nagendhiran
பிப் 07, 2025 17:28

தமிழன்டா?


M Ramachandran
பிப் 07, 2025 17:28

சேகர்பாபு மூஞ்சியை அப்பாவியாக வைத்திருக்கிறார்


Venkateswaran Rajaram
பிப் 07, 2025 16:58

ஜாமீன் வழங்க நீதிபதி தயாராக இருக்கிறார்... அரசியலில் கொள்ளை அடிப்பவர்களுக்கும் இந்த மாதிரி மொள்ளமாரிகளுக்கும் கொலை செய்பவர்களுக்கும் நம் நாட்டில் மிகவும் எளிதாக ஜாமீன் கிடைக்கும் பொழுது குற்றங்கள் கூடுமே ஒழிந்து கண்டிப்பாக குறையாது


V வைகுண்டேஸ்வரன்
பிப் 07, 2025 16:51

Which state in India has the highest crime rate in 2024? Uttar Pradesh According to the National Crime Records Bureau NCRB data, Uttar Pradesh has the highest crime rate in India in 2024.Dated : 09 Jan 2025


S. Venugopal
பிப் 07, 2025 17:55

உத்திர பிரதேசத்தின் மக்கள் தொகை 24.63 கோடி என்பதினை மனதில் கொள்ள வேண்டும். உத்திர பிரதேசத்தில் ஏறக்குறைய 77 சதவிகிதம் மக்கள் கிராமத்தில் வசிக்கிறார்கள்.


பேசும் தமிழன்
பிப் 07, 2025 20:07

துரை...... இங்க்லீஷ் எல்லாம் பேசுது..... இன்னைக்கு 200 ரூபாய் கட் ஆகி விடும் போல் தெரிகிறது.


முருகன்
பிப் 07, 2025 16:39

ரயிலில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏறலாம் இறங்காலம் பாதுகாப்பு குளறுபடி அதிகம்


Sampath Kumar
பிப் 07, 2025 16:29

நிச்சயம் இவண் வட்டகனே பேரு பார்த்தாலே தெரிகிறது மூஞ்சியும் கூடத்தான் பிஜேபி சங்கி கூட்டத்தை சேர்ந்தவன் தான்


பேசும் தமிழன்
பிப் 07, 2025 20:09

யார் அந்த சார் என்பதே இன்னும் முடியவில்லை.... பார்த்து.... இவன் இன்னொரு சார் ஆக இருக்கப் போகிறான்...


சந்திரசேகரன்,துறையூர்
பிப் 07, 2025 22:58

நீ ஒரு அமைதி மார்க்க மூர்க்கன் என்று எங்களுக்கு நல்லா தெரியுது என்ன செய்ய நீ சம்பத்குமார் என்கிற போலி பெயரில் உலா வருவது போலவே அவனையும் வடக்கன் என்று சொல்கிறாய்.


Madras Madra
பிப் 07, 2025 16:27

கஞ்சா போதை வஸ்துக்கள் தான் இந்த அரக்கத்தனங்களுக்கு காரணம் போதை வஸ்துக்கள் எளிதாக கிடைக்க அரசு தான் காரணம் அறமற்ற சமூகம் மிக வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது எல்லாம் திராவிட மாயை உரிமைகள் வேண்டும் ஆனால் பொறுப்பின்றி இருப்போம் அதிகாரம் வேண்டும் ஆனால் கடமை மறுப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை