உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காரில் சென்று 40க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு; பலே கில்லாடி கைது

காரில் சென்று 40க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு; பலே கில்லாடி கைது

விருதுநகர்: காரிலேயே சென்று 40 க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட பலே கில்லாடியை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை இபி காலனியைச் சேர்ந்தவர் பாலு மகன் பொன்ராஜ் 44. இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.காரைக்குடி மற்றும் குன்றக்குடி பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து தொடர் திருட்டு நடந்து வந்தது. சிசிடிவி கேமரா அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் முக்கிய சாலை மற்றும் கேமரா உள்ள சாலைகளை பயன்படுத்தாமல் குறுகிய தெருச் சாலையை பயன்படுத்தி கார் ஒன்று சென்று வந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் காரை பின் தொடர்ந்து பொன்ராஜை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர் 40க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்து தங்கள் நகைகள், பணம், திருட்டுக்கு பயன்படுத்திய கார், திருட்டு பணத்தில் வாங்கிய கார் என மூன்று கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
மே 31, 2025 19:44

பாவம் எவ்வளவு வருடங்கள்தான் திருடர்கள் நடந்துவந்து, அல்லது இரு சக்கர வாகனத்தில் வந்து திருடுவார்கள். கால் வலிக்காதா?


Keshavan.J
மே 31, 2025 18:02

எங்க ஊருலேயும் அரசியல்வியாதியும், அதிகாரிகளும் காரில் வந்து தான் திருடுவார்கள்


Ramesh Sargam
மே 31, 2025 22:09

அந்த அரசியல் திருடர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் உண்டு. இல்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை