உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமியை பாலியல் வன்முறை செய்த நபர்; தப்பி ஓட்டம்

சிறுமியை பாலியல் வன்முறை செய்த நபர்; தப்பி ஓட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டத்தில், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், ரயிலில் தப்பிய நிலையில், சம்பவ இடத்தை சுற்றி, மொபைல் போன் டவரில் பதிவாகியுள்ள, 600 பேர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த, 12ம் தேதி மதியம் பள்ளி முடிந்து, பாட்டி வீட்டிற்கு தனியாக நடந்து சென்ற, 10 வயது சிறுமியை, மர்ம நபர் மாந்தோப்புக்குள் துாக்கிச் சென்று பாலியல் வன்டுகொடுமை செய்தார். சம்பவம் நடந்து ஒன்பது நாட்களாகியும், மர்ம நபர் குறித்து போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை. அந்த நபரை, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் மேற்பார்வையில், மூன்று டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.சம்பவம் நடந்த நேரத்தில், அந்த இடத்தை சுற்றி, மொபைல் போனில் பேசிய நபர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர். அதிலிருந்து, 600 எண்களை தேர்வு செய்து, அந்த எண்ணுக்கு உரியவர்களிடம், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உருவ ஒற்றுமை

அவர்களிடம், சிசிடிவியில் பதிவாகி உள்ள மர்ம நபரின் படத்தை காண்பித்து விசாரிப்பதுடன், உருவ ஒற்றுமை உடைய நபர்களையும் கண்காணிக்கின்றனர். சம்பந்தப்பட்ட நபர், ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து, புறநகர் ரயில் வாயிலாக ஆரம்பாக்கம் வந்துள்ளார். அவருக்கு மொபைல் போன் அழைப்பு வந்துள்ளது. அவர் ஹிந்தியில் பேசி உள்ளார். இதனால், சூளூர்பேட்டை மற்றும் ஆரம்பாக்கம் இடையே, ரயில் பாதையில் உள்ள டவர்களில் பதிவான மொபைல்போன் எண்களையும், போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்திற்கு பிறகு, அந்த நபர் ரயிலில் வெளிமாநிலத்திற்கு தப்பி சென்றதை, போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனால், மர்ம நபர் சென்ற ரயில் வழித்தடம் முழுதும் விசாரணை நடக்கிறது. நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களுக்கு, அந்த நபரின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிற மாநில போலீசாரும், ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதனால், மர்ம நபர் விரைவில் சிக்குவார் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

த.வெ.க., போராட்டம்

குற்றவாளியை உடனடி யாக கைது செய்ய வலியுறுத்தி, நேற்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தை, த.வெ.க.,வினர், 300 பேர் முற்றுகையிட்ட னர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு குவிந்த இளைஞர் கூட்டத்தை, போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களில், 150க்கும் மேற்பட்டோர் அத்துமீறி ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து கோஷமிட்டனர். பின்னர், போலீசாரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.இதனால், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

த.வெ.க., போராட்டம்

குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, நேற்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தை, த.வெ.க.,வினர், 300 பேர் முற்றுகையிட்டனர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு குவிந்த இளைஞர் கூட்டத்தை, போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களில், 150க்கும் மேற்பட்டோர் அத்துமீறி ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து கோஷமிட்டனர். பின்னர், போலீசாரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.இதனால், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Padmasridharan
ஜூலை 22, 2025 07:37

சினிமாவிலே தட்டி கேட்டாச்சு.. கட்சி ஆரம்பிச்சவுடன் தட்டி கேட்கறாங்க.. விஜயம் ஜெயித்த பின்னரும் தொடரட்டும் / அதிகார அநீதிகள் குறையட்டும் சாமி


S.jayaram
ஜூலை 21, 2025 16:06

தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் எவ்வளவு சிறப்பாக பராமரிக்கப் படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் மேற்கு மாவட்டத்தில் தோட்டத்தில் வசித்து வந்த 75 வயது மூதாட்டி இழுத்துச்சென்று கற்பழித்துக்கொலை, கும்மிடிப்பூண்டியில் 10 சிறுமி பள்ளி சென்றுஉதிரும்புகையில் கடத்தி பாலியல் வன்முறை மகளிர் ஆணையம் என்ன செய்கிறது, சில கட்சிகளின் மகளிர் அமைப்புகள் வீரம் என்னவாயிற்று.


Barakat Ali
ஜூலை 21, 2025 11:44

துப்பு துலக்க முடியலை என்பது கட்டுக்கதை ......... திமுக வில் அவனும் ஒரு சாராக இருப்பான் ........


Manivel P
ஜூலை 21, 2025 09:57

திமுக ஆட்சி பொறுப்பேற்றாத முதல் தமிழகத்தில் சட்டமூலங்கு மிக மோசமடைந்துள்ளது


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 21, 2025 10:33

நைஜீரியா , அபிகானிஸ்தான் , பங்களாதேஷ் , சோமாலியா , மியான்மர் , பெலாருஸ் ,ஏகுவடோரியால் கினியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது ..தினம்தோறும் அன்கொன்றும் இன்கொன்றுமாக சிறுமி முதல் பாட்டிவரை கற்பழிப்பு நடக்கிறதை தவிர வேரோரு குற்றமும் காண முடியாது ..


என்னத்த சொல்ல
ஜூலை 21, 2025 09:57

செய்தியை படிக்கும்போது போலீசார் சரியான நடவடிக்கை தான் எடுத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. எந்த அடிப்படையும் இல்லாமல், ஆட்சியை குறை சொன்னால், எரிச்சலில் தான் முடியும்.


raja
ஜூலை 21, 2025 08:37

அந்த உடன் பிறப்புக்கு எந்த திராவிட விடியல் மாடல் "சார்" அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வச்சி இருக்கானோ....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 21, 2025 07:27

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..தொண்டனாக இருக்க வேண்டும், அதனால் விங்ஞான முறைப்படி தப்பிவிட்டார் .. எனவே.. 200 ரூபாய் உபிஸ் கள் .."ஏன் அந்த சிறுமி தனியாக அந்த நேரத்தில் அந்த ரோட்டில் சென்றாள் சிறுமியை வற்புறுத்து பள்ளிக்கூடத்திற்கு படிக்கஅனுப்பிய பெற்றோர்களை விசாரிக்க வேண்டும் ..பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்த கற்பழிப்பு ..அதை எதிர்கட்சிகள் பெரிது படுத்துகிறனர் ..இதேபோல் குஜராத்தில் ,உத்திரபிரதேசத்தில் . பீகாரில் , ,,,ஆப்ரிக்காவில் ,,,,அமெரிக்காவில் ..நடக்கவில்லையா ..என்று ஆரம்பிப்பார்கள்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 21, 2025 06:14

வெளிமாநிலம் ? நம்ம முதல்வரின் மாநிலம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை