உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.டி.எம்.,களில் காவலாளிகள் கட்டாயம்: வங்கிகளுக்கு காவல் துறை வலியுறுத்தல்

ஏ.டி.எம்.,களில் காவலாளிகள் கட்டாயம்: வங்கிகளுக்கு காவல் துறை வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஏ.டி.எம்., மையங்களில், 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிக்குமாறு, வங்கிகளை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.ஹரியானாவைச் சேர்ந்த, 'மேவாட்' கொள்ளையர், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட ஆறு மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம்., மையங்களை குறிவைத்து கொள்ளை அடித்துள்ளனர். கேரளாவில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிய, மேவாட் கொள்ளையரை நாமக்கல் போலீசார் பிடித்தனர்,இந்நிலையில், ஏ.டி.எம்., மையங்களில் பகல், இரவு நேர காவலாளிகளை நியமிக்க வேண்டும் என, காவல் துறை சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஏ.டி.எம்., மையங்களில், 60 வயதுக்கும் மேற்பட்டோரை, காவலாளியாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும். பகல், இரவுக்கு தனித்தனி காவலாளிகளை நியமிக்க வேண்டும். இரவு நேரத்தில், காவலாளி பணியில் இருப்பது கட்டாயம்.ஏ.டி.எம்., மையங்களில், பெயரளவில் இல்லாமல் தரமான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அதன் இயக்கம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையங்களுக்கு வந்து செல்வோரை பதிவு செய்யும் வகையில், கேமராக்கள் பொருத்த வேண்டும். அடிக்கடி வந்து செல்லும் சந்தேக நபர்கள் குறித்து படம் பிடித்து, அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.ஏ.டி.எம்., மையம் அருகே நீண்ட நேரம் அமர்ந்து இருப்போர், அந்த மையத்தை சுற்றி வரும் சந்தேக நபர்கள் குறித்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஏ.டி.எம்., மையங்களில் எச்சரிக்கை அலாரம் கட்டாயம். வங்கி அதிகாரிகள், 'வாட்ஸாப்' குழுக்கள் துவங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ரோந்து போலீசாரிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என, வங்கி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bhaskaran
அக் 06, 2024 08:43

நிறைய தாத்தாக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.செக்யூரிட்டி பீரோ தரும் 10000 சம்பளத்துக்கு 12 மணிநேர வேலைக்கு யார் வருவார்கள்


venugopal s
அக் 05, 2024 16:43

எனக்குத் தெரிந்து பதினைந்து இருபது வருடங்களாக காவல்துறையும் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றனர் ஆனால் வங்கிகள் கண்டு கொள்வதே இல்லை.


Ramesh Sargam
அக் 05, 2024 11:50

இப்பவும் ஏ.டி.எம்.,களில் காவலாளிகள் இருக்கிறார்கள். ஆனால் எப்படிப்பட்டவர்கள் என்றால், அறுபது அல்லது எழுபது வயது உடையவர்கள், மெல்லியதாக ஒரு உடம்பு, காற்று பலமாக அடித்தால் கீழே விழுந்துவிடும் அளவுக்கு மெல்லிய உடம்பு, கண் சரியாக தெரியாது, காது சரியாக கேட்காது... இப்படித்தான் இப்பொழுதுள்ள காவலாளிகள் உள்ளனர். அதில் இரவு வேலை செய்பவர்கள் பணிக்கு வரும்போதே சரக்கு அடித்துவிட்டுவந்து நன்றாக படுத்து தூங்கிவிடுவார்கள். காவலாளிகளை நியமிக்கும், வங்கியின் அதிகாரிகள் நல்ல திடமான, நல்ல ஆரோக்கியம் உள்ளவர்களை நியமிக்கமாட்டார்கள். குறைந்த சம்பளத்தில் நான் முன்கூறிய மெல்லிய உடம்பு உள்ள வயதானவர்களை காவலாளியாக நியமிப்பார்கள். இப்படி இருந்தால் ஏன் ஏ.டி.எம்.,களில் அடிக்கடி திருட்டு நடக்காது?


sridhar
அக் 05, 2024 09:29

24 மணி நேர atm எல்லா இடங்களிலும் தேவை இல்லை . இரவு 10 மணிக்கு மேல் அதிக ஹிட்ஸ் இல்லாத atm களை இரவில் மூடிவிடலாம் , அல்லது வங்கிகளுக்கு இடையே புரிந்துணர்வோடு ஒன்றிரண்டு atm மட்டும் வைக்கலாம் . பல இடங்களில் பல வங்கிகளின் atm over saturated ஆக இருக்கு.


Kasimani Baskaran
அக் 05, 2024 08:35

ஆங்காங்கு கண்காணிப்பு காமிராக்கள் இருக்கும் பொழுது தனிப்பட்ட பாதுகாப்பு என்பது கொள்ளையர்கள் அடித்துப்போட்டு போக ஆள் தேடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.


GMM
அக் 05, 2024 07:59

ATM போன்ற வங்கி பொது சேவை மையங்களை பாதுகாக்க தான் தமிழக மாநில போலீஸ் நியமனம். இந்த சுற்றறிக்கை தவறு ? போலீஸார் இஷ்டம் போல் பணி தேர்வு செய்ய முடியாது. வங்கி பாதுகாப்புக்கு தனி செலவு மற்றும் போலீஸாருக்கு வரியில் இருந்து சம்பளம். இரட்டை செலவுக்கு அனுமதி இருக்காது . அப்படி விதி இல்லை என்றால் கட்டண அடிப்படையில் பொலிஸார் காவல் புரிய முன்வர வேண்டும் அல்லது வங்கிகள் பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும்.


Ramesh
அக் 05, 2024 07:46

ஒரு வங்கியில் ஆயிரம் ஏடிஎம் இருப்பதாக வைத்து கொள்வோம். இரவு நேர காவலாளிக்கு குறைந்தது 15000 மாத சம்பளம் என்று வைத்து கொண்டாலும் வங்கி வருடத்திற்க்கு 1 1/2 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும். அதனை காவல்துறை கொடுக்குமா ? இல்லை வங்கிகள் வாடிக்கையாளரிடமிருந்து தான் வசூல் செய்யும். காவல்துறை தன்னுடைய ரோந்து பணியினை சரிவரச் செய்தாலே போதும்.


KRISHNAN R
அக் 05, 2024 07:30

காவலாளி விட....கடைத்தெரு மற்றும்... மக்கள் நடமாடும் இடத்தில்..அமைத்தால் நன்றாக இருக்கும்.


அப்பாவி
அக் 05, 2024 06:03

அக்கினி வீரர்களுக்கு வேலை குடுக்கலாம்.


hari
அக் 05, 2024 09:01

அக்னி வீரர்கள் நாட்டை பாதுகாக்க.... டாஸ்மாக் கடை களுக்கு இல்லை


அப்பாவி
அக் 05, 2024 06:03

அக்கினி வீரர்களுக்கு வேலை குடுக்கலாம்.


சமீபத்திய செய்தி