உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்: சீமான் அதிர்ச்சி தகவல்

திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்: சீமான் அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : '' எனக்கு தெரிந்து திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர், '' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: முருகனை தொட்டதே ஒரு அரசியல் தான். ஆன்மிகம், முருகன் மாநாடு, பக்தர்கள் மாநாடு என்று சொன்னால் அரசியல் இல்லையா. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கும்போது தொடுவதற்கு என்ன காரணம் என கேட்க வேண்டும்.இப்ப மாநாடு போட்டவர்கள், இதே மாநாட்டை அடுத்தாண்டு போடுவார்களா என்று கேட்கவேண்டும். ஆண்டுதோறும் இதே போன்று மாநாடு போட்டால், அரசியல் இல்லை , ஆன்மிகம். தேர்தலில் ஓட்டுவரவில்லை என்றால், இது பயனில்லை என்று விட்டு விடுவார்கள். அடுத்தாண்டு போடட்டும். அரசியலா, இல்லையா என பார்ப்போம்.விவசாயிகளின் குறைகளை ஆட்சியாளர்கள் என்றைக்கும் கேட்டது கிடையாது. வெள்ள பாதிப்பின் போது நிவாரணம் கேட்ட விவசாயிகள் போராடி உள்ளனர். அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். வலி வரும்போதும், துயரம் வரும் போதும் தெருவில் நின்று போராடுவது , பிறகு துன்பத்தை துயரத்தை நம்முயை உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது உரிமைக்கு நிற்காத அரசுகளுக்கு மீண்டும் ஓட்டு போட்டு அதிகாரம் அளிப்பது மிகப்பெரியதவறு. இனியாவது விழிப்புற்று எழ வேண்டும். இல்லை என்றால் கடினம்ஸ்ரீகாந்த் பாவம். எனக்கு தெரிந்து, திரையுலகில் நிறைய பேர் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர். புகழ் பெற்றவர்கள் பயன்படுத்துகின்றனர். அவர் சிக்கிகொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகின்றேன். ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போதை பொருள் வராது. நீண்ட நாட்களாக இருக்கிறது. நாடெங்கும் இருக்கிறது. திரையுலகில் மட்டும் அல்ல. பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று விட்டது. வழிபாட்டு தலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. அரசு நினைத்தால் போதைப் பொருள் ஒழிந்துவிடும். ஸ்ரீகாந்த் புகழ்பெற்ற நடிகர் என்பதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் கைதாகவில்லை என்றால் விற்பனை தொடரும். ஆட்சியாளர்கள் நினைக்க வேண்டும். ஆனால், நினைக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 25, 2025 09:02

நீயே பெரிய தண்ணிவண்டி, எத்தனை மேடையில் தண்ணி போட்டு பேசியிருப்பாய், போதா குறைக்கு பனையேறி கள் இறக்கி தண்ணி அடிக்கிறே அசிங்கம் பிடிச்ச பயலே.


SIVA
ஜூன் 24, 2025 21:22

இவ்ரு ஏற்கனவே முருகனை முப்பாட்டன் என்று சொன்னார் , இன்னும் சிலரை பாட்டன் என்று சொன்னார்


தமிழ்வேள்
ஜூன் 24, 2025 20:27

ஆப்ரஹாமிய மத வழிபாட்டுத் தலங்கள் என வெளிப்படையாக சொல்லுப்பா ஆமையா.. அதென்ன மொட்டையாக பேசி ஹிந்து கோவில்கள் மீது சந்தேகம் கிளப்பும் குசும்புத்தனம்?...அப்பா அரைப் போதை கடை...மொவன் ஃபுல் போதை ஹோம் டெலிவரி யாவாரம் ன்னு ஓப்பனாக சொல்லேன் பார்ப்போம்..


Mecca Shivan
ஜூன் 24, 2025 20:24

அமிரு ..அண்ணனை முறைச்சு போட்டுக்கொடுத்துடுவாரு ..ஜாக்கிரதை


Santhakumar Srinivasalu
ஜூன் 24, 2025 20:10

உமது பேச்சை/உளறலை பார்த்தால் உமக்கு கூட போதை பொருள் சப்ளை ஆகியிருக்கும்னு போல இருக்கு?


Kasimani Baskaran
ஜூன் 24, 2025 20:09

சின்னவருக்கும் சினிமாவுக்கும் தொடர்பில்லை என்று டீம்க்கா ஐடி விங் விரைவில் அறிவிக்கும்.


yts
ஜூன் 24, 2025 19:54

நீங்களும் அந்த field இருந்து தான் வந்தவர்... ஞாபகம் இருக்கா


Ramesh Sargam
ஜூன் 24, 2025 19:42

இவர் அந்த கோபாலபுரம் குடும்பத்தில் ஒரு சிலரை மறைமுகமாக குறிப்பிடுகிறார்.


Aumathi Sankar
ஜூன் 24, 2025 19:30

திருத்தணி் ஆஸ்பத்திரில fan கீழே விழுந்து ஒரு அம்மா வுக்கு அடி பட்டு இருக்கு. அத பத்தி யாருமே பேசல !!


sridhar
ஜூன் 24, 2025 21:30

அதான் நீங்க பேசிட்டீங்களே .


சிட்டுக்குருவி
ஜூன் 24, 2025 19:28

குற்றவியல் சட்டத்தில் குற்றம் செய்வதில்லாமல் குற்றம் நடப்பதறிந்தும் அதை காவல்துறைக்கு தெரிவிக்காமல் இருப்பதும் குற்றமே .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை