உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆண்டாள் கோயிலில் மார்கழி வழிபாடு திருப்பாவை பட்டில் ஆண்டாள்

ஆண்டாள் கோயிலில் மார்கழி வழிபாடு திருப்பாவை பட்டில் ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பாடல்கள் கொண்ட பட்டு அணிந்து ஆண்டாள், ரெங்கமன்னாருடன் எழுந்தருளினார்.108 வைணவ தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது திருப்பாவை பாடல்கள பட்டு அணிந்து ஆண்டாள், ரெங்கமன்னாருடன் எழுந்தருளினார்.இவ்விழாவில் திரித்தண்டி நாராயண ராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து இன்று முதல் மார்கழி மாதம் முழுவதும் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை