வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர்கள் நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்கள். எந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும் நேராகக் கூறாமல், சீனாவை மறைமுகமாகச் சொல்கிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது…
மதுரை : மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு இன்று (ஏப்.,2) தமுக்கம் மைதானத்தில் துவங்குகிறது.இதையொட்டி மார்க் கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், இந்திய கம்யூ., தேசிய செயலாளர் ராஜா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று மதுரை வந்தனர். அவர்களை மாநாட்டு நிர்வாகிகள் வரவேற்றனர். மோடி பயணம் ஆச்சரியமல்ல
விமான நிலையத்தில் பிரகாஷ் காரத், ராஜா ஆகியோர் கூறுகையில், இன்றைய அரசியல் சூழலில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய அளவில் இடதுசாரிகள் ஒன்றுமையாக செயல்பட்டு வருகின்றனர். எதிர்காலத்திலும் தொடரும்'' என்றனர். முன்மாதிரியாக செயல்படுகிறார் ஸ்டாலின்
ராஜா மேலும் கூறியதாவது: பா.ஜ., ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்பது தெளிவாகிறது. ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை பின்பற்றக்கூடிய கட்சியாக அது மாறி இருக்கிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக செயல்படுகிற அரசாக பா.ஜ., திகழ்கிறது. இந்த ஆட்சியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும், மக்களை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம். நாடு காப்பாற்றப்பட வேண்டும், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மோடி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும்.பிரதமர் மோடி சுதந்திரமாக இருப்பதாக வெளியில் பேசி வருகிறார். ஆனால் பா.ஜ., வை ஆர்.எஸ்.எஸ்., தான் ஆட்டி வைக்கிறது.நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு இடது சாரிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்டவைகளில் முன்மாதிரியாக செயல்படுகிறார். இந்திய ஒற்றுமை காக்கப்பட வேண்டும், மாநில உரிமைகள், தமிழக உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்றார்.மாநாட்டையொட்டி நகரில் அனைத்து இடங்களிலும் கட்சி கொடி, தோரண வாயில், கம்யூ., தலைவர்கள் இடம் பெற்ற ஓவிய மாடல் ஆர்ச்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை (ஏப். 3) முதல்வர் ஸ்டாலின் இம்மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.
இவர்கள் நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்கள். எந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும் நேராகக் கூறாமல், சீனாவை மறைமுகமாகச் சொல்கிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது…