மேலும் செய்திகள்
கூலி தொழிலாளி பலி
02-Feb-2025
சென்னை:'பட்டியல் ஜாதி மக்களின் உபரி நிலத்தை, தன் பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.அக்கட்சி மாநில செயலர் சண்முகம் அறிக்கை:பட்டியல் ஜாதியினருக்கு, நிபந்தனை அடிப்படையில், அரசு வழங்கிய உபரி நிலத்தை, மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வாங்குவது சட்டப்படி செல்லாது. அது தெரிந்தும் அதிகார துஷ்யபிரயோகம் செய்து, வருவாய்த் துறை அதிகாரிகளை பயன்படுத்தி, தன் பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல் மோசடியானது.நிலத்தை உடனே மீட்பதுடன், மோசடியில் ஈடுப்பட்ட பன்னீர்செல்வம் மீது, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூரில் இது மாதிரியான மோசடியில், ஜெயலலிதா உட்பட அவரது உறவினர்களும் ஈடுபட்டனர். அவர்கள் வாங்கியது செல்லாது என, நீதிபதி சிவசுப்பிரமணியன் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
02-Feb-2025