மேலும் செய்திகள்
செய்யூர் அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
10-Apr-2026
சென்னை: முதுநிலை 'க்யூட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர, 'க்யூட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு, 'க்யூட்' நுழைவுத்தேர்வு, கடந்த மாதம் நடந்தது. மொத்தம், 157 பாடப்பிரிவுகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வுக்கு, 4 லட்சத்து, 11,366 மாணவ - மாணவியர் விண்ணப்பித்த நிலையில், 3 லட்சத்து, 45,220 பேர் மட்டுமே எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவ - மாணவியர், ttps://exams.nta.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என, தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தி உள்ளது.
10-Apr-2026