எம்.பி.பி.எஸ்., 3ம் கட்ட கவுன்சிலிங் 18ல் முடிவு வெளியீடு
சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மாநில இடங்களுக்கும், இணையவழி கலந்தாய்வு அடுத்தடுத்து நடக்கிறது. இதில், இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. நாடு முழுதும் பல்வேறு கல்லுாரிகளில், புதிய மருத்துவ இடங்கள், கூடுதல் இடங்கள் சேர்க்கப்படுவதால், அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது. தற்போது அகில இந்திய ஒதுக்கீட்டில், மூன்றாம் கட்ட கலந்தா ய்வு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம், வரும், 18ம் தேதி முடிகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.