உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சிமொழி தமிழ் தீர்மானம் நிறைவேற்ற ம.தி.மு.க., கோரிக்கை

ஆட்சிமொழி தமிழ் தீர்மானம் நிறைவேற்ற ம.தி.மு.க., கோரிக்கை

சென்னை,:சட்டசபையில் நேற்று பட்ஜெட் விவாதத்தில், அரியலுார் ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சின்னப்பா பேசியதாவது:தமிழக அரசின் கடனை, தி.மு.க., அரசு கட்டுக்குள் வைத்துள்ளது. கடன் வாங்கிய பணத்தில் உள்கட்டமைப்பு, சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. பெண்களுக்கு சொத்துரிமை போன்ற தி.மு.க., அரசின் பல திட்டங்களை, மத்திய அரசும், மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன.பட்ஜெட்டில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே உயிர்ப்புடன் இருக்கும் செம்மொழி தமிழ் மட்டுமே. தமிழகத்தின் இருமொழி கொள்கை வெற்றிகரமான திட்டம். மொழிப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழியாக வேண்டும். இந்திய ஆட்சி மொழியாக தமிழை கொண்டுவர, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை