உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.இ., -எம்.டெக்., கவுன்சிலிங் துவக்கம்

எம்.இ., -எம்.டெக்., கவுன்சிலிங் துவக்கம்

சென்னை : எம்.இ., உள்ளிட்ட, முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. பி.இ., படிப்பிற்கான கவுன்சிலிங், கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், எம்.இ., -எம்.டெக்., - எம்.ஆர்க்., ஆகிய முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில், நேற்று துவங்கியது.

அகில இந்திய அளவில், ஐ.ஐ.டி., நடத்தும், 'கேட்' தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தகுதியுடையோர், எம்.இ., -எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இன்று மாற்றுத் திறனாளிகளுக்கும், நாளை முதல் வரும் 26ம் தேதி வரை, அண்ணா பல்கலை நடத்திய, 'டான்செட்' தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும், கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைப் பிரிவுச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ''முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கு, மொத்தம் 7,770 இடங்கள் உள்ளன. இப்படிப்புகளில் சேர, மொத்தம் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 'கேட்', 'டான்செட்' தேர்வுகளில், விண்ணப்பதாரர்கள் எடுத்துள்ள மதிப்பெண் அடிப்படையில், மொத்தம் 10 ஆயிரம் பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை