வாசகர்கள் கருத்துகள் ( 19 )
குடும்பத்துல எல்லார் பெயரையும் சொல்லிட்டு, அந்த ஹோட்டல் பெயரை சொல்லாம விட்டுடீங்க. ஏன் இந்த பாரபட்சம். சொன்னால் அடுத்த உயிர் தப்பிக்குமே
இரவு நேரங்களில் பரோட்டா சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். எனக்கு சிறு வயதில் பரோட்டா சாப்பிட்டு அஜீரணமானது, உணவு என் மூச்சு குழாயை அடைத்துவிட்டது. மூச்சு விட தவித்தேன் . நல்ல நேரம் என் அக்கா மாமா கவனித்து என்னை காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள். இந்த குழந்தை அருகே யாரும் இல்லை நினைக்கிறேன்.
பெரும்பாலும் பரோட்டா நிறைய சுட்டு அடுக்கி வைத்து கொள்வார்கள் விற்பனையாகாமல் மீதமாகும் பரோட்டாக்களை அடுத்தநாள் மேலே அடுக்கி வைத்து முதலில் விற்பார்கள் எனவே நீங்கள் நல்ல விற்பனையாகும் கடைகளில் வாங்கினால் உங்களுக்கு அன்று தயாரிக்கப்பட்ட பரோட்டா கிடைக்க வாய்ப்புண்டு
புரோட்டா உண்டதாலா இல்லையா என்பதும் அவரே மருத்துவம் படிக்கும் மாணவி என்பதும் ஒருபுறம் இருக்கட்டும் .... அசவுகரியம் - லேசான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே - பெற்றோரை எழுப்பியிருக்க வேண்டாமா ??
அந்த மாணவி சாப்பிட்ட புரோட்டா மட்டுமே கேடானதா!!! அந்த கடையில் சாப்பிட்ட வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா???
சரியான கேள்வி
சூப்பர் கேள்வி. அந்த ஓட்டலில் வேற யாரும் சாப்பிடவில்லையா?
செய்தி நிறைய படிப்பிர்கள் போல
ஜங்க் ஃபுட் சாப்பிடாதீர்கள் என்று அறிவுறுத்துவதே அலோபதி மருத்துவர்கள்தாம் ....
என்னவோ பரோட்டா சாப்பிட்ட உடன் மயங்கி விழுந்து இறந்தது போல செய்தி போடுவது தவறு. என்ன உத்தேசத்தில் இப்படி செய்தி என்று புரியவில்லை.
ஓஹோ , அது திமுக பர்ரோட்டவா
பத்திரிக்கையாளர்கள் தொழில் தர்மத்தை பேண மறுக்கிறார்கள். அவர் பரோட்டா வாங்கிய கடையில் பலரும் சாப்பிட்டிருப்பார்களே? அவர்களில் யாருக்கேனும் உடல் உபாதை வந்ததா என விசாரிக்க வேண்டும். பரோட்டா வாங்கியதில் இருந்து மறுநாள் காலை வரை என்ன நடந்தது என்று தீர விசாரித்து பின்னர் எதனால் இறந்தார் என பிரசுரிக்க வேண்டும். போலீஸ் விசாரணை முடிவிற்கு முன்னரே குற்றவாளி இவர்தான் என ரிசல்ட் சொல்லும் பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படிச் செய்தியில் இல்லையே .... இரவு பரோட்டா உண்டு உறங்கியிருக்கிறார் .... காலையில் அவரை எழுப்ப வந்தவர்கள் நிலைமையைக் கவனித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்திருக்கிறார் ....
The cause for death is yet to be known. Before that, how can you come rio a conclusion that her last taken food is the cause??? And the readers wilkins start abusing all hitela and daabhas. And these rich readers would have never taken any food from these small hotels.
தமிழ் நாடு முழுக்க உள்ள பிரியாணி கடைகள், பரோட்டா கடைகள் மொத்தமும் அசுத்தம் ...20 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற கலாச்சாரம் தமிழ் நாட்டில் கிடையாது...விலை மலிவு ஆனால் நோய் இலவசம் .....இது போன்ற பல மரணங்கள் நடந்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் ....
தேசிய நெடும்சாலைகளிலும், மாநில நெடும்சாலைகளிலும், எங்கு பார்த்தாலும் இந்த புரோட்டா வியாபாரம் பல வருடங்களாக நடக்குது. புரோட்டா ஒரு சரியான உணவு இல்லையென்றால் தினம் தினம் உயிர்பலி இருக்கவேண்டும். அப்படி எதுவும் நடப்பதில்லையே... அப்படி இருக்கையில் ஓரிரு இடங்களில் உயிர் பலி என்றால், தயாரிப்பதில் ஏதோ தவறு என்று நினைக்கிறேன். உணவு ஆய்வாளர்கள் அடிக்கடி சோதனை நடத்தி எங்கு தவறு என்று கண்டறிந்து, தரம் இல்லாமல் புரோட்டா தயாரிப்பவர்களை தண்டிக்கவேண்டும். உயிர்பலி தடுக்கப்படவேண்டும்.