வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வயசாகிப்போச்சு தான் செய்யறது என்ன வென்று புரியவில்லை போலும்
சென்னை; சென்னை வந்துள்ள ராமதாஸ் நேற்று தன் மூத்த மகள் காந்திமதி, பேரன் முகுந்தன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.பா.ம.க.,வில் அப்பா, -மகன் இடையிலான மோதல் உச்சத்தை அடைந்த நிலையில், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த 5ம் தேதி தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அன்புமணி, தன் தந்தை ராமதாசை சந்தித்தார். அன்று ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து, மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னை வந்த ராமதாஸ், ஆழ்வார்பேட்டையில் தன் இளைய மகள் வீட்டில் தங்கினார். அவரை நேற்று, மூத்த மகள் காந்திமதி, பேரன் முகுந்தன் ஆகியோர் சந்தித்து பேசினர்.சென்னையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த ராமதாஸ், 'முகுந்தன் விவகாரம் முடிந்து விட்டது. அவருக்கு கட்சி பொறுப்புகளில் விருப்பம் இல்லை; தொழிலில்தான் ஆர்வம்' என்றார். கட்சி பொறுப்பில், குடும்பத்தினர் யாரும் இருக்கக் கூடாது என்ற அன்புமணியின் கோரிக்கையை, ராமதாஸ் ஏற்றுக் கொண்டு சமாதானத்திற்கு தயார் என்பதை சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், முகுந்தனுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தியிருப்பது, பா.ம.க.,வில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக, அன்புமணி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து ராமதாசிடம் கேட்டபோது, ''முகுந்தன் வந்தார்; தாத்தாவை பார்த்து விட்டு சென்றார். பா.ம.க.,வில் இணைந்து செயல்பட முகுந்தனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா, இல்லையா என்பதை சொல்ல முடியாது. ''அவர் கட்சிக்குள் வரவும் வாய்ப்புள்ளது. எதையும் உறுதியாக சொல்ல முடியாது. அரசியல் என்பது நீண்ட, நெடிய பயணம். அதில் அவ்வப்போது இதுபோல் நடக்கத்தான் செய்யும்,'' என்றார்.
வயசாகிப்போச்சு தான் செய்யறது என்ன வென்று புரியவில்லை போலும்