உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெல்டாவை பாலைவனமாக்கும் மேகதாது; கர்நாடக காங்., அரசு கைவிட வேண்டும்- -த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி

டெல்டாவை பாலைவனமாக்கும் மேகதாது; கர்நாடக காங்., அரசு கைவிட வேண்டும்- -த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி

ராஜபாளையம் : ''தமிழக டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா காங்., அரசு கைவிட வேண்டும்,'' என ராஜபாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. சில ஆண்டுகளாக கர்நாடக அரசு காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின்படி முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவில்லை. தமிழக டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடக காங்., உடனடியாக கைவிட வேண்டும்.முல்லைப்பெரியாறு அணையை தமிழக அரசு பராமரிக்க தேவையான வழிகளை கேரள அரசு ஏற்படுத்தி தர வேண்டும். 2026ல் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வர். மாநிலத்தில் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அதிகரித்து கொண்டே செல்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சாண்டில்யன்
டிச 09, 2024 19:49

ஆராயிரம் ஏக்கர் சாகுபடி கேள்விக்குறியாகுமேன்னு கவலைல சொல்றார் அவர் கவலை அவருக்கு


முக்கிய வீடியோ