உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை, கோவையில் மெட்ரோ திட்டம் எப்போது: சென்னை மெட்ரோ திட்ட இயக்குனர் தகவல்!

மதுரை, கோவையில் மெட்ரோ திட்டம் எப்போது: சென்னை மெட்ரோ திட்ட இயக்குனர் தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், 3 ஆண்டுகளில் மதுரை மற்றும் கோவையில் ஒரே கட்டமாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே இன்று (டிச. 21) கள ஆய்வு மேற்கொண்ட பிறகு அவர் கூறுகையில், ''மதுரையில் மெட்ரோ அமைய அனைத்துவித சாத்தியக் கூறுகளும் உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது உள்ளது. இதற்கிடையில் சிக்கலான பகுதிகள் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் 6 மாதங்களில் டெண்டர் விடப்பட்டு, 3 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ திட்டத்தை மதுரைக்கும், கோவைக்கும் ஒரே கட்டமாக செயல்படுத்தி வருகிறோம். மதுரையில் அமையவுள்ள வழித்தடம் பெரும்பாலும் சுரங்கப்பாதையாக அமைவதால் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்னை கிடையாது. எனினும் பூமிக்கடியில் உள்ள பாறைகளால் சவால் நிறைந்ததாக உள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kundalakesi
டிச 21, 2024 21:50

மூன்று வருடமா. 2030-க்கும் மேல் ஆகும்


சாண்டில்யன்
டிச 21, 2024 23:12

உண்மைதான் டில்லி தர்பார் ஒப்புதல் தரவே இழுத்தடிக்கும் இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தந்தாலும் தமிழ்நாட்டுக்கு பைசா தராதே


புதிய வீடியோ