உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிரம்புகிறது மேட்டூர் அணை; நீர் வரத்து 68 ஆயிரம் கனஅடி!

நிரம்புகிறது மேட்டூர் அணை; நீர் வரத்து 68 ஆயிரம் கனஅடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. மொத்த நீர்த்தேக்க உயரமான 120 அடியில் தற்போது நீர்மட்டம் 119.22 அடியாக உள்ளது.கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று காலை வினாடிக்கு, 73,452 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 80,984 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 26,000 கனஅடி நீர் அணை மின் நிலையங்கள், 8 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது.இந்நிலையில், இன்று (ஜூன் 29) காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு 68,007 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 118 அடியில் இருந்து 119.22 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த உயரமான 120 அடியில் தற்போது நீர்மட்டம் 119.22 அடியை எட்டியது.மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில், வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும். அதனால் காவிரி வழித்தட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Yasararafath
ஜூன் 29, 2025 16:20

அருமை


Varadarajan Nagarajan
ஜூன் 29, 2025 14:00

தமிழகம் நீர் மேலாண்மயில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மேட்டூர் அணைக்கு இதுபோல் அதிகப்படியான நீர் வரத்து இருக்குபோது அணை நிரம்பியதும் நீர்வரத்தை அப்படியே வெளியேற்றி காவிரியின் அனைத்து உபநதிகளிலும் பகிர்ந்தளிக்கவேண்டும். இதனால் டெல்ட்டாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் நிரப்பவேண்டும். முழுவதுமாக கொள்ளிடத்தில் திருப்பினால் கடலில்சென்று வீணாகின்றது. உபரிநீரை சீராக வெளியேற்றாமல் அப்படியே வெளியேற்றியதால் முக்கொம்பு அணை சேதமடைந்ததை கவனத்தில்கொள்ளவேண்டும்.


Nada Rajan
ஜூன் 29, 2025 10:35

வர்ண பகவானுக்கு மிக்க நன்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை