உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அணை நிரம்புகிறது; நீர்மட்டம் 119.3 அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நிரம்புகிறது; நீர்மட்டம் 119.3 அடியாக அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.3 அடியாக உள்ளது. வினாடிக்கு 2886 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சில தினங்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.3 அடியாக உள்ளது. வினாடிக்கு 2886 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 800 கன அடி தண்ணீர் காவிரி மற்றும் வாய்க்காலில் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து மற்றும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆகியவற்றில் தொடர்ந்து இன்றைய நிலை நீடித்தால் இன்னும் நான்கு நாட்களில் அணை முழு கொள்ளளவு 120 அடியை எட்டிவிடும்.நடப்பாண்டு மேட்டூர் அணை கடந்த ஜூலை 30 முதல் முறை, ஆகஸ்ட் 12 இரண்டாவது முறை நிரம்பியது. தற்போது மூன்றாவது முறை நிரம்ப வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை