உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடித்து துவைத்த மழை...! 29 நாட்கள் கடந்து மேட்டூர் அணையில் ஒரு மேஜிக்

அடித்து துவைத்த மழை...! 29 நாட்கள் கடந்து மேட்டூர் அணையில் ஒரு மேஜிக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டூர்; தொடர் மழையை அடுத்து 29 நாட்களுக்கு பின்னர் மேட்டூர் அணை 100 அடியை எட்டி இருக்கிறது.காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அக்.21ம் தேதி நிலவரப்படி விநாடிக்கு 18,094 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.நேற்றைய தினம், சற்று குறைந்து 17,856 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து, 29,850 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 100.01 அடியை எட்டி உள்ளது. நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. ஆக இருக்கிறது. இதன் மூலம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 7,500 கனஅடி வீதமும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.முன்னதாக, நீரின் அளவு வெகுவாக சரிந்ததால் அக்டோபர் 14ம் தேதி அணையின் நீர்மட்டம் 89 அடிக்கு சரிந்தது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N Sasikumar Yadhav
அக் 23, 2024 10:49

கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருக்கும்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்து திராவிட மாடலின் மணல் கொள்ளையிலிருந்து காவிரி தப்பியது. ஆனால் தீயமுக தலைமையிலான புள்ளிராஜா இன்டி கூட்டணியின் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க ஆட்சிக்கு வந்தபின் காவிரியில் நீர்வரத்து குறைந்துவிட்டது


சாண்டில்யன்
அக் 23, 2024 11:20

போன ஆட்சியில் இதில் எங்கே வந்தது திராவிட மாடல் மணல் கொள்ளையிலிருந்து காவிரி தப்பியது என்பது அப்பட்டமான பொய் என்பதை முக்கொம்பு அணை உடைந்து ஐயம் திரிபு அற நிரூபித்தது. டெல்டா மாவட்டங்களுக்கு நீர் திறக்காமலே மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்


Elanthirai R
அக் 23, 2024 13:26

கர்நாடகாவில் பா ஐ கட்சி ஆட்சியில் இருக்கும் போது உபரி நீரை திறந்த விட்டதால் தான் மேட்டுர் அணை நிரம்பியது மத்தியில் பாஜக தான் ஆட்சி செய்கிறது அவர்கள் நினைத்தால் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும் அதை சொல்வதற்கு துப்பில்லை


Ravi Ganesh
அக் 23, 2024 18:45

ஆட்சிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? எந்த கட்சி ஆண்டால் என்ன ? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


முக்கிய வீடியோ