உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது; திருமாவளவன்

எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது; திருமாவளவன்

திருச்சி: 'எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் என்னிடம் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது,' என்று விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.எம்ஜிஆர் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், 'அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய் விடுவார்,' என்று எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k7vkverz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் கூறியதாவது; 50, 60 ஆண்டுகளாக தமிழக அரசியல் எப்படி இயங்கி வந்தது, எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பது குறித்த பேச்சில் எம்ஜிஆரை குறிப்பிட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதா மீது எனக்கு அதீத மதிப்புண்டு. அவர்களை பலமுறை மனம் திறந்து நான் பாராட்டியுள்ளேன். தமிழக அரசியல் எப்படி கருணாநிதியை மையப்படுத்தி, அவருக்கு எதிர்ப்பு அரசியலாக மாறியது என்பதை அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசினேன். அவ்வளவு தான். எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் என்னிடம் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது, எனக் கூறினார். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக இபிஎஸ் கூறியது பற்றிய கேள்விக்கு; அது அவரது ஆசை. 8 மாத காலத்தில் மிகப்பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று இபிஎஸ் விரும்புகிறார். அது அவரது தனிப்பட்ட விருப்பம். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும். உறவை அல்லது கூட்டணியை சிதைப்பதாக இருக்குமா? என்பது தெரியவில்லை. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
ஆக 10, 2025 09:06

எல்லா ஜாதிகளையும் வேஷம் கட்டி ஆடுனவங்களாச்சே. மக்களும் நம்புனாங்களே


veeramani
ஆக 10, 2025 09:03

தமிழக தேர்தல் வரும் சமயம் இது ... மக்களே எவர் சாதி பிரச்சினையை கிளப்புகிறார்கள். பொது தொகுதியில் கலம் காண இயலாத ஒருவர் பாரதரத்னா எம் ஜி ஆர் பற்றியும் ஜெயா ஜாதிகளை பற்றி பேசுகிறார் . எலெக்ஷனேல் நபருக்கு பதிலடி கொடுப்போம்


துரை
ஆக 10, 2025 07:27

திருமாவின் பார்வை சாதி அரசியலை தாண்டாது, மக்களிடம் சாதி வெறியை ஊக்குவிக்க, திமுக போன்று இவ்வாறாகப் பேசுகிறார்


panneer selvam
ஆக 10, 2025 00:22

Thiruma ji , do not try to fool the public . Just look at the video how you abused MGR and Jayalalitha linking braminism . After seeing the opposition , now you are changing the stand and flatly denying it is not the meaning his speech . Are you not feeling bad by changing the stand at every time.


panneer selvam
ஆக 10, 2025 00:22

Thiruma ji , do not try to fool the public . Just look at the video how you abused MGR and Jayalalitha linking braminism . After seeing the opposition , now you are changing the stand and flatly denying it is not the meaning his speech . Are you not ashamed of it by changing the stand at every time.


D Natarajan
ஆக 09, 2025 21:43

அறிவிலி . தான் பெரிய அறிவு ஜீவி என்று நினைப்பு. ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது , கூட்டணி இல்லாமல். இவர் ஒரு அரசியல் வியாதி . ஹிந்து விரோதி. தமிழக மக்களே 2026 ல் இவரைப்போன்றவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். டெபாசிட் கூட கிடைக்க கூடாது


KRISHNAN R
ஆக 09, 2025 21:15

இங்கே அங்கே..... விளையாட்டு... போல் இருக்கிறது


Jayamkondan
ஆக 09, 2025 20:58

ஜாதி என்கிற வார்த்தையை விடவே மாட்டீங்களா நீங்க... வாய தொறந்தா அந்த வார்த்தை தான்..


s balaji
ஆக 09, 2025 20:38

thanks to this guy for provoking the people aginst to his inner attitude...you should have talked about mgr n jj when jj is alive


Nagarajan D
ஆக 09, 2025 19:57

நீர் ஒரு ஒதுக்கீட்டு பிறவிதான். உமக்கு பிளாஸ்டிக் சேர் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை