உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நுண்ணுயிர் அழிவு அனைத்து உயிர்களுக்குமான எச்சரிக்கை; பருவநிலை உச்சி மாநாட்டில் சத்குரு பேச்சு

நுண்ணுயிர் அழிவு அனைத்து உயிர்களுக்குமான எச்சரிக்கை; பருவநிலை உச்சி மாநாட்டில் சத்குரு பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தொண்டாமுத்துார்: ஐ.நா.,வின், 29வது பருவநிலை உச்சி மாநாட்டில், 'நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார்.ஐ.நா., சபை சார்பில், சி.ஓ.பி., 29 எனப்படும் பருவநிலை உச்சி மாநாடு, அசர்பைஜான் நாட்டில், கடந்த 11ம் தேதி துவங்கியது. இதில் உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மண்வளம் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசியதாவது:நாம் சூழலியல், காலநிலை ஆகியவற்றை பற்றி பேசும்போது, இது மனித உயிர், வாழ்வாதாரம் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை முறை பற்றியது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.இந்த பூமியின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களும் உயிர்ப்போடு இருப்பதில் இருக்கிறது. நுண்ணுயிர், பூச்சி, புழு மற்ற அனைத்து சிறிய உயிர்களும் வலிமையாக வாழவில்லை என்றால், நாம் வலிமையாக வாழ முடியாது.நீண்ட காலமாக நிலம், பசுமை போர்வையின்றி தரிசாக விடப்படுவதால், அதிகமான உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிர்கள் அழிந்து போகின்றன. இந்தப் போக்கு, பூமியை அழித்துவிடும். உயிரினங்கள் என்று சொன்னால் நாம் பாண்டா, புலி மற்றும் டைனோசர்கள் பற்றி நினைக்கிறோம். ஆனால், அப்படி இல்லை. நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை.மண் அழிவு என்பது மிகத் தீவிரமான பிரச்னை. ஆனால், இதை பற்றி யாரும் பேசுவதில்லை. தற்போது, இந்த மாநாட்டில் நாம் பசுமையான உலகத்தைப் பற்றி பேசுகிறோம். மேலும், விவசாய நிலங்கள் ஒன்று மரங்கள், புதர்கள், மூடு பயிர்கள் என, ஏதோ ஒரு வகையில் பசுமை போர்வையின் கீழ் வரவேண்டும்.நானும், நீங்களும், கச்சா எண்ணெய் நல்லதல்ல என்று சொல்வதால் மட்டுமே, இந்த உலகம் எண்ணெய் பயன்பாட்டை கைவிட்டு விடாது. சரியான மாற்று வழிகள் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

J.Isaac
நவ 14, 2024 19:00

இந்தியா விதிவிலக்கு


Ramaswamy Jayaraman
நவ 14, 2024 14:10

குருவை சொல்லி குற்றமில்லை. அவருக்கு இப்படி ஒரு பட்டமும் கொடுத்து, அவரை, இந்த மாநாட்டிற்கு அழைத்தவர்களை தான் .... இயற்க்கை சூழலை மாற்றி அங்கிருந்த மனிதர்களையம் உயிர் இனங்களையும் அழித்த புண்ணியவான் இவர்தான். காடுகள் மலைகள் விளை நிலங்கள் ஒன்றையும் விட்டு வைக்காமல் அழித்த மாமனிதன். இவர்தான் நுண்உயிர் அழிவை பற்றி பேசுகிறார், இது காலத்தின் கோலம். இவருக்கும் பின்னால் ஒரு பெரும் கூட்டம் ஏதோ ஒரு காரணித்திற்க்காக செல்கிறது


Velan Iyengaar
நவ 14, 2024 08:43

தகுதியற்றவன் ஒப்பனை பேச்சு .... படிப்பது ராமாயணம் .. இடிப்பது பெருமாள் கோவிலை ......


sankar
நவ 14, 2024 09:17

தம்பி ரொம்ப படிச்சா திராவிடியன் போல இருக்கு -


Faisal
நவ 14, 2024 08:32

நீங்க எப்படியும் நம்ம கொடுக்கிற எதிர் கருத்து எதுவாக இருந்தாலும் போடப் போறது இல்லை.... But அவர் நல்ல விஷயம் பேசி இருக்கார்….


நிக்கோல்தாம்சன்
நவ 14, 2024 06:29

நீங்க சொல்வது சரிதான் பெரியவரே ,


mohan v
நவ 14, 2024 05:48

அய்யா வாக்கு அருள் வாக்கு,எல்லோரும் கேட்டுக்கிங்க.


லிங்கம், கோவை
நவ 14, 2024 06:58

அது அருள் வாக்கு இல்லைங்க... நடைமுறை உண்மை.


Dharmavaan
நவ 14, 2024 08:16

மடையனுக்கு எல்லாம் கேலி பொருளே


Duruvesan
நவ 14, 2024 08:41

மூர்க்ஸ் நம்ம அறிவுக்கு முரசொலி தான் சரி


Senthoora
நவ 14, 2024 05:47

மாற்று ஏட்பாடாக , ஈஷாவில் தகன மேடை அமைத்திருக்கிறார்.


லிங்கம், கோவை
நவ 14, 2024 06:56

ஆதி குடிமக்கள் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்காக அமைக்கப்பட்டது தான் தகனமேடை.


லிங்கம், கோவை
நவ 14, 2024 05:24

நன்றி சத்குரு...


Kasimani Baskaran
நவ 14, 2024 05:06

அணைத்து உயிர்களையும் சார்ந்து இருப்பதுதான் மனித வாழ்க்கை.


J.V. Iyer
நவ 14, 2024 04:39

ஆஹா.. அருமை சத்குரு உங்கள் பணி வாழ்க.


முக்கிய வீடியோ