உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை: அமைச்சர் மகேஷ்

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை: அமைச்சர் மகேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “மத்திய அரசிடம் இருந்து பணம் வந்த பின், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:

ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வகையில், மூன்று அல்லது நான்கு மாத தாமதத்திற்கு பின், 13 வகை கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த முறை 1,141 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை, பள்ளி துவங்கும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வர வேண்டிய 600 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மத்திய அரசிடம் கடந்த மாதம் நேரடியாக வலியுறுத்தி உள்ளோம். இப்பிரச்னைக்கு தீர்வு காண, முதல்வரின் ஆணைப்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்து, மத்திய அரசிடம் இருந்து பணம் வந்தபின், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கட்டணமின்றி சேர்க்கப்படுவர். கடந்தாண்டுகளில் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் மோதல் சம்பவங்கள் அரங்கேறின. நடப்பு கல்வியாண்டில் இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், பள்ளி திறந்த முதல் வாரத்தில், மாணவர்களுக்கு மனரீதியான வாழ்வியல் திறன் சார்ந்த வகுப்பு எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.மாநில கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை முதல்வரிடம் உள்ளது. விரைவில் அதை அவர் வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

prakashparveen
ஜூன் 06, 2025 14:48

100நாள் வேலைத்திட்டம் மட்டும் பணம் வரவில்லை என்று போராட்டம் பண்ணின திமுக பள்ளி கல்வியில் மட்டும் போராட்டம் பண்ணுவதில் தீவிரம் காட்டவில்லை..... ஏன் ஏனென்றால் 100 நாள் வேலைத்திட்டம் முலம் போராட்டம் பண்ணினால் ஓட்டு கிடைக்கும் என்கின்ற நோக்கில் செயல்பட்டன....... இதில் யாரும் பெற்றோர்கள் போராட்டம் பண்ணமாட்டார்கள் என்கிற எண்ணம் தான்......


niranjani ravi
ஜூன் 04, 2025 11:49

இந்த வருடம் சேராமல் அடுத்த சேர்ந்தால் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தளர்வுகள் தரமுடியுமா தேவையில்லாத திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை ஏன் குழந்தைகள் கல்விக்காக ஒதுக்க முடியல உங்களின் அரசியல் போட்டிக்கு குழந்தைகளின் கல்வி தான் பலியா such a worst thing....


Ravindranathan Ramalingam
ஜூன் 04, 2025 09:28

அனைவருக்கும் கல்வி என்பது அரசின் கொள்கை. அந்த வகையில் தமிழகத்தில் அரசாங்கப் பள்ளிகள் சிறந்த ஆசிரியர்களுடன் சிறந்த ரிசல்ட் களை அளிக்கும் வகையில் சிறப்பாக நடந்து வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் அந்தப் பள்ளிகளில் கிடைக்கின்றன. உணவு உடை கல்வி உபகரணங்கள் எல்லாமே தரப்படுகின்றன. மேலும் கல்வித்தரத்தில் உயர்ந்து விளங்கும் ஏழை மாணவர்களுக்கு மாடல் ஸ்கூல்ஸ் எல்லா மாவட்டங்களிலும் கற்பனைக்கு எட்டாத வசதிகளுடன்இயங்குகின்றன. இந்த இலவச வசதிகள் எதுவும் இல்லாத தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஏழை மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் அவர்களை கஷ்டப்படுத்துவது என்பது மக்களின் எண்ணமா.


Ravindranathan Ramalingam
ஜூன் 04, 2025 09:17

அனைவருக்கும் கல்வி என்பது அரசின் கொள்கை. அந்த வகையில் சிறந்த ஆசிரியர்களுடன் எல்லா தேவைகளும் பூர்த்தி செய்து அரசாங்க பள்ளிக்கூடங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. சமுதாயத்தில் கீழ்த்தட்டில் வாழும் மாணவர்கள் அந்த அரசாங்க பள்ளிகளை உபயோகப்படுத்திக் கொள்வதில் என்ன தயக்கம். மேலும் நன்கு படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாடல் ஸ்கூல் எல்லா மாவட்டங்களிலும் இயங்குகின்றன. அது குறித்து பொதுமக்களுக்கு போதுமான தகவல்கள் இல்லை. நன்கு படிக்கும் ஏழை மாணவர்களை உச்ச நிலைக்கு ஏற்றி வைக்கும் படிகளாக தமிழகத்தில் மாடல் ஸ்கூல்ஸ் உள்ளன. ஆகவே தேவை இல்லாத தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆர்வத்தை அந்த மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.


RAMESH
ஜூன் 03, 2025 21:24

கடலில் பேனா வைக்கும் திராவிட மாடல்–க்கு கல்விக்கு பணம் இல்லை.... கலெக்சன் பணம் கரப்சன்....‌டாஸ்மாக் பத்து ரூபா வசூல்..... ஆட்சி மாற்றம் நிச்சயம்....


Neelachandran
ஜூன் 03, 2025 17:05

ஆயிரக் கணக்கான கோடிகளை விரயம் செய்வார்கள்.ஏழை மாணவர்களுக்காக 600 கோடி மாநில நிதியிலிருந்து செலவு செய்ய மாட்டீர்களா?


lana
ஜூன் 03, 2025 11:07

கேவலம் 600 கோடி பணம் இல்லை யா. கடந்த 4 ஆண்டு களில் 4 லட்சம் கோடி கடன் வாங்கிய பின்னும் 600 கோடி கூட மிச்சம் மீதி இல்லாமல் தின்று தீர்த்து விட்டது இந்த விடியல் அரசு. இதை விட கேவலமான அரசு ஒன்று இருக்கிறதா. குவாட்டர் க்கு 10 ருபாய் வாங்க தெரியும். மக்களுக்கு நல்லது செய்ய தெரியாது. நீங்க உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் இல் தொடர்ந்த வழக்கு செலவுக்காக பணத்தை மிச்சம் பிடித்தாலே 600 கோடி வந்து விடும்


sd tailor
ஜூன் 03, 2025 09:52

டாஸ்மார்க் ஊழல் பணம் ஆயிரம் கோடி முப்பதாயிரம் கோடியும் கொள்ளையடிச்சிங்களே அந்த பணம் என்ன ஆச்சு அந்த பணத்தை வைத்துக் கொண்டு மாணவர் கல்வியை மேம்படுத்தலாமே உங்க கஜானாக்கு இன்னும் வந்து சேரவில்லையா


மாணவமணி
ஜூன் 03, 2025 09:47

தனியார் பள்ளிகளில் உப்புமா, பொங்கல், வடை உண்டா?


mani kandan
ஜூன் 03, 2025 09:22

இது எந்த வகையிலும் நியாயமான பதில் இல்லை 600 கோடி தமிழக அரசிடம் இல்லையா? பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற வள்ளுவர் வாக்கை மறக்க வேண்டாம்