உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளில் மாஸ்க் கட்டாயமா: அமைச்சர் மகேஷ் பதில்

பள்ளிகளில் மாஸ்க் கட்டாயமா: அமைச்சர் மகேஷ் பதில்

திருச்சி: பள்ளிகளில் தேவைப்பட்டால் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சுகாதார அமைச்சரிடம் பேசிய வரை இப்போதைய பாதிப்பு வீரியமில்லாத வைரஸ், பயப்படத் தேவையில்லை. எச்சரிக்கை என்ற வகையில் அந்தந்த மாவட்டங்களில் மருத்துவமனைகள் தயாராகவே உள்ளது.பயமுறுத்தலாகவோ, அச்சுறுத்தலாகவோ இல்லாத பட்சத்தில் யாரும் பயப்பட தேவையில்லை. பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம் அணிய சொல்லுவோம். பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 04, 2025 12:37

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் தேர்வில் மார்க் எவ்வளவு முக்கியமோ, அதுபோல அவர்கள் உடல் நலன் கருதி மாஸ்க் போடுவதும் மிக மிக முக்கியம். என்னா சொல்றீங்க மகேஷ்?


vijai hindu
ஜூன் 04, 2025 13:08

போ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை