உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மகேஷ் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

அமைச்சர் மகேஷ் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பதவியில் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j8ew4q9u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், தி.மு.க., அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை. உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, மகேஷ் விலக வேண்டும். முதல்வர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

pmsamy
பிப் 19, 2025 15:23

சாகும்வரை அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்வார்


ராஜ்
பிப் 19, 2025 15:00

அண்ணாமலை அவர்களே உங்கள் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இவர்களின் பட்டத்தை அடக்குவதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. திமுக மீது நீங்கள் கொடுத்த ஊழல் பட்டியல்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன ஆகையால் நீங்கள் சும்மா கத்தி கொண்டு இருக்காதீர்கள்.


venugopal s
பிப் 19, 2025 14:38

உங்கள் மத்திய ரயில்வே அமைச்சரை ஐம்பத்து நான்கு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யச் சொல்வீர்களா? கும்பமேளா கூட்ட நெரிசல் இறப்புக்கு தார்மீகப் பொறுப்பேற்று உங்கள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகியை ராஜினாமா செய்யச் சொல்வீர்களா?


T.sthivinayagam
பிப் 19, 2025 14:02

முந்தைய ஆட்சி காலத்தில் பாலியல் வன்கொடுமை கட்சி விஐபிகள் கட்ட பஞ்சாயத்து செய்து மறைத்து காசு பணம் பார்த்தார்கள் இப்போது பெற்றோர்கள் கட்ட பஞ்சாயத்து இல்லாமல் போலிசில் புகார் கொடுக்கிறார் போலிசும் நடவடிக்கை எடுக்கிறது மீடியாக்களும் உதவுகின்றனர் ஆனால் சுய லாப அரசியல் கட்சிகள் கட்ட பஞ்சாயத்து பண்ண முடியாது போனதால் அரசியல் செய்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்


Sridhar
பிப் 19, 2025 13:27

எதோ பாக்கி பேரெல்லாம் ஒழுக்கமானவங்க மாதிரி இந்த ஆள மட்டும் பதவி விலக சொன்னா, அவருக்கு வலிக்காதா?


சுமேஷ்
பிப் 19, 2025 13:17

தான் தேர்தலில் ஜெயிக்க துப்பில்லேன்னாலும் அடுத்தவனை கீழே இறக்க துடிப்பு.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 19, 2025 13:28

என்ன செய்வது பணத்திற்கும், இலவசத்திற்கும், போதைக்கும் அடிமையாகி சகதியில் வீழ்ந்து கிடக்கும் மக்களை சுத்த படுத்திவரும் ஒரு நேர்மையானவன் வெற்றிபெற நாட்கள் பிடிக்கும் தான்....!!!


Kjp
பிப் 19, 2025 13:44

தேர்தலில் ஜெயிக்கலைனாலும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கருத்து போட உரிமை உண்டு என்று தெரியுமா சுமேஷ்.


Laddoo
பிப் 19, 2025 13:11

இவனுங்க பதவியெல்லாம் விட்டு விலக மாட்டானுங்க. இதுவே இவனுங்க அனுபவிக்கிற கடைசி பதவி. கோந்து போட்டுக் பதவி நாற்காலியிலே உக்காந்துட்டானுங்க. காசலும் குவட்டாராலும் சோற்றாலடித்த பிண்டங்களுக்கும் ரோஷம் வரும் காலம் உண்டு.


Tc Raman
பிப் 19, 2025 13:04

தன் துறை வேலையை தவிர மீதி எல்லாம் பார்க்கிறார். இலவச சைக்கிள் வூழல விசாரணை முறையாக நடந்திருந்தால் இந்த துறையின் லட்சணம் வெளியே வந்திருக்கும்.


Rajarajan
பிப் 19, 2025 12:19

என்ன கண்ணு, இப்படி பொசுக்குன்னு சொல்லிபோடீங்க? அமைச்சர்கள் / அரசியல்வாதிகள்ல முக்காவாசிப்பேறு, அரசியல் மட்டும் இல்லன்னா, கல்குவாரில தான் வேலைக்கு போகோணும் கண்ணு. என்ன கண்ணு, நான் சொல்றது சரிதானே நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு.


Ramesh Sargam
பிப் 19, 2025 12:05

திமுக அரசே கலைக்கப்படவேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள். இவர் என்னவென்றால் அமைச்சர் மகேஷ் பதவி விலகவேண்டும் என்று கூறுகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை