உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் போராடும் நிலையே ஏற்படவில்லை; அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் போராடும் நிலையே ஏற்படவில்லை; அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

சென்னை : தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் சாகுபடி பரப்பு, 151 லட்சம் ஏக்கராகவும், உற்பத்தி திறன் ஹெக்டேருக்கு 2,980 கிலோவாகவும் அதிகரித்துள்ளதாக, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சட்டசபையில் நேற்று, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் பேசியதாவது:ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும், அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக, இந்தியாவுக்கே திசைகாட்டியாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். தமிழகத்தில், 65 சதவீதம் பேர் விவசாயிகள். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், போராட்டமே விவசாயிகளுக்கு வாழ்க்கையாக இருந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள் போராடும் நிலையே ஏற்படவில்லை.மாவட்டந்தோறும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, 4,428 விவசாயிகளின் கருத்தை கேட்டு, அதன் அடிப்படையில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வைத்த, 2,535 கோரிக்கைகளில், 1,166 நிறைவேற்றப்பட்டு உள்ளன. மக்காச்சோளம் மேம்பாட்டு திட்டத்திற்கு, 40 கோடி ரூபாய், எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க, 128 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசும் போது, தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக தெரிவித்தார். 2019- - 20ல் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 151 லட்சம் ஏக்கராக அதாவது 4.23 லட்சம் ஏக்கர் உயர்ந்துள்ளது.கடந்த 2019- - 20ல், 29.74 லட்சம் ஏக்கராக இருந்த இருபோக சாகுபடி பரப்பு, 2023 - -24ல், 39.60 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2011 முதல் 2021 வரை, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், 84 லட்சம் ஏக்கராக இருந்த சராசரி உணவு தானிய பரப்பு, உற்பத்தி, தி.மு.க., ஆட்சியில், 96 லட்சம் ஏக்கர், அதாவது 12 லட்சம் ஏக்கர் உயர்ந்துள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், 434.29 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, கடந்த நான்கு ஆண்டுகளில், 456.39 டன்னாக அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் ஹெக்டேருக்கு, 2,876 கிலோவாக இருந்த உணவு தானியங்களின் உற்பத்தி திறன், 2,980 கிலோ அதாவது 104 கிலோ அதிகரித்துள்ளது.அகில இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், மக்காச்சோளம், கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும், குறுதானியங்கள், நிலக்கடலை உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், தமிழகம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

dhana hari
மார் 23, 2025 16:01

தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவந்த டிராக்டருக்கான தாட்கோ மான்யத்தை திமுக அரசு நிறுத்தியது அவர்களுடைய தொழிலை அழிக்க செய்யும் நடவடிக்கையாக உள்ளது. தனியார் வங்கியில வாங்கிய கடனை அடைக்க முடியாத கவலையில் அவர்கள் உள்ளனர். எனவே இதுகுறித்து மறுபரிசீலனை செய்து அவர்களுடைய விவசாய தொழிலை மேம்படுத்த வேண்டும்


sankar
மார் 23, 2025 06:10

ஆட்டய போடும் ஆட்சி


ramani
மார் 23, 2025 06:06

ஏன் எல்லோரும் இறந்து விட்டனரா


ஆரூர் ரங்
மார் 22, 2025 12:59

விவசாய மின்சாரம் யூனிட்டுக்கு 2 பைசா கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகளை துப்பாக்கி சூடு நடத்திக் கொன்ற திமுக ஆட்சியின் கடந்தகாலம் மறக்காது.


பேசும் தமிழன்
மார் 22, 2025 08:11

சென்ற ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் எல்லாம் உங்கள் செட்டப் ஆட்கள்..... உங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள்..... பிறகு எப்படி இப்போது உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்துவார்கள் ???


Muniyappan C
மார் 22, 2025 23:07

சென்ற ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் எல்லாம் உங்கள் செட்டப் ஆட்கள்.. உங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள்.. பிறகு எப்படி இப்போது உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்துவார்கள்??


Kasimani Baskaran
மார் 22, 2025 07:49

ஏற்பாடு செய்த விவசாயிகள் எப்படி உண்மை நிலையை சொல்ல முடியும்? உதாரணத்துக்கு எடப்பாடி போன்ற டம்மி ஒருவரை ஏற்பாடு செய்து சட்டசபை கூட நடக்க வாய்ப்பு இருக்கிறது.


RAMKUMAR
மார் 22, 2025 06:28

ஏன் சார் .. கட்டிங் அண்ட் செட்டிங்ஆ


நிக்கோல்தாம்சன்
மார் 22, 2025 06:22

ஸ்டிக்கர் ஒட்டியாச்சா பன்னீரு


RK Sivasubramaniam
மார் 22, 2025 05:22

நீங்கள் தான் போராட்டம் என்ற வார்த்தையை கேள்விப்பட்ட உடனேயே அது சம்பந்தபட்ட முக்கிய தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து விடுகிறீர்களே. பிறகெப்படி போராட்டம் நடைபெறும்? போராட்டம் செய்யும் நபர்களை தன்னார்வலர்கள் என்ற பெயரில் உருவாக்கி சோறு போட்டவர்கள் நீங்கள் தான். பிறகு எப்படி உங்களுக்கு எதிராக போராடுவார்கள்? விசிக, கம்யூனிஸ்டு இவர்கள் எல்லாம் பதவி கிடைத்ததினால் போராட்டம் என்ற வார்த்தையை மறந்தே போய் விட்டனர்.


Mani . V
மார் 22, 2025 05:19

பரந்தூர் மக்களை மறந்து விட்டாயா? எது கோமாவில் இருந்து இப்பொழுதான் மீண்டு வந்தாயா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை