உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைனில் பதிவு தொடரும் அமைச்சர் திட்டவட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைனில் பதிவு தொடரும் அமைச்சர் திட்டவட்டம்

சென்னை:''ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் குறித்த விபரத்தை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தொடரும்,'' என, கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்துக்கு பின் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - விஜயபாஸ்கர்: ஜல்லிக்கட்டு விழா எடுக்கும் கமிட்டிக்கு, அரசு துணை நிற்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்ற, 200 மாடுகளுக்கு மேல் வைத்து நடத்தப்படுகிறது. சில பகுதிகளில், 'ஆன்லைன்' வழியாக 'டோக்கன்' வழங்குகின்றனர். இதை ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தும் கமிட்டி, வெற்றிலை -- பாக்கு வைத்து பாரம்பரிய முறைப்படி அழைப்பு விடுக்கிறது. எனவே, ஜல்லிக்கட்டு நடத்தும் கிராம கமிட்டியிடம், டோக்கன் வழங்கும் முறையை ஒப்படைக்க வேண்டும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்த மாடுகளுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் டோக்கன் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கால்நடைகள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த முன் அனுமதி பெற்ற கால்நடைகள் மட்டுமே, போட்டியில் அனுமதிக்கப்படும். எவ்வித குழப்பமும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்த, இது வழிவகுக்கிறது. எனவே, ஆன்லைன் பதிவேற்றம் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை