உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒழுங்கா பட்டா கொடுக்கணும்! அதிகாரியை ஒரு விரல் நீட்டி கடுகடுத்த அமைச்சர் பொன்முடி

ஒழுங்கா பட்டா கொடுக்கணும்! அதிகாரியை ஒரு விரல் நீட்டி கடுகடுத்த அமைச்சர் பொன்முடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்; மக்களுக்கு ஒழுங்காக பட்டா கொடுக்க வேண்டும். அதற்கான எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரியை அமைச்சர் பொன்முடி ஒருவிரல் நீட்டி கடுகடுத்து பேசினார். விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம், காடகனூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் பொன்முடி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அதற்கான விழா இன்று நடைபெற்றது.விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்த போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தங்களுக்கு பட்டா தருவதில் அதிகாரிகள் தாமதப்படுத்தவதாக புகார் கூறினார். மக்களின் குமுறலையும், அதிருப்தியை கண்ட அமைச்சர் பொன்முடி உடனடியாக அங்கேயே நடவடிக்கையில் இறங்கினார்.சம்பந்தப்பட்ட கண்டாச்சிபுரம் வட்டாட்சியரை மேடையில் இருந்தபடி அழைத்தார். அமைச்சரின் திடீர் அழைப்பால் ஒரு கணம் திகைத்த வட்டாட்சியர் உடனடியாக அவர் முன் சென்றார். அப்போது பொன்முடி பேசியதுதான் ஹைலைட்.அவர் பேசியதாவது: முதல்வர் வரும் போது, இன்னும் 10 நாட்களில் எல்லோருக்கும் பட்டா கொடுக்க போகிறோம். நம் மாவட்டத்தில் புதுசா 10 ஆயிரம் பேருக்கு பட்டா தர உள்ளோம்.எல்லாம் கரெக்டாக பண்ணி, இந்த தாலுகாவில், தொகுதியில் எங்கேயும் பட்டா இல்லாமல் இருக்கக்கூடாது. உங்களுக்கு எங்கேயாவது இருந்து அது வரணும், இது வரணும் என்று (ஒரு விரலை நீட்டி) பார்த்திட்டு இருக்கக்கூடாது. ஒழுங்கா நீங்க தான் சரியான புறம்போக்கு நிலமா இருந்தா, அதில் பட்டா கொடுப்பதற்கான எல்லா வேலையும் செய்யணும். ஏதாவது நின்னுச்சன்னா, அப்புறம் என்ன நடவடிக்கை எடுக்கணுமோ, முதல்வர் அதை செஞ்சிருவாரு. இது என் தொகுதி. முன்னமே சொன்ன மாதிரி ரொம்ப பழக்கப்பட்ட ஊரு. நாளைக்கு பிரச்னையும் இருக்கக்கூடாது. பட்டா கொடுக்கணும். இவ்வாறு அதிகாரியை அமைச்சர் பொன்முடி அதட்டி, நடவடிக்கையை வேகப்படுத்தினார். பின்னர், அதே மேடையில் புகார் கூறிய பெண்ணை பார்த்து, பட்டா வந்துவிடும் என்றும் உறுதி கூறினார். மேடையில் நின்றபடி, அதிகாரியை அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி துளைத்தெடுத்ததை கண்டதும், புகார் கூறிய பெண் மகிழ்ச்சியுடன் திரும்பிச்சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

dhanaraju
நவ 20, 2024 16:31

நடிப்பதற்கு சொல்லி தர வேண்டுமா


Indian
நவ 16, 2024 14:12

இது போல பல இடங்களில் ஒழுங்கா நேரத்திற்கு பட்டா கொடுப்பதில்லை .அதையும் கொஞ்சம் கண்டிச்சி வச்சா நல்லாயிருக்கும் .


Kumar Kumzi
நவ 15, 2024 23:47

ஜாமீனில் இருக்கும் ஊழல்வாதிக்கு இம்பூட்டு திமிறா?


Kanns
நவ 15, 2024 23:09

Recover All Freebies incl Pattas Given from Any Lands by Vote-Hungry Parties to 90% Undue/Undeserving People Most Families have Multiple Job Workers above Poverty Line But Cookedup by Bribed Politicians/ Officials. Recover Costs from Parties& Leaders


ஆரூர் ரங்
நவ 15, 2024 21:58

மூலப் பத்திரமே இல்லாத கட்டிடத்திற்கும் பட்டா கிடைக்கும் ஓனர் வி ஐ பி யாக இருந்தால்


Venkateswaran Rajaram
நவ 15, 2024 21:29

ஊரில் உள்ள சொத்துக்களில் 90 சதவீதம் பட்டா அண்ணனுடைய பெயரில்தான் இருக்கும்


S. Venugopal
நவ 15, 2024 21:12

மாண்புமிகு அமைச்சர் பொன்முடி அவர்களின் உடனடி நடவடிக்கையை பாராட்டப்பட வேண்டும். சில மாதங்களுக்கு முன் மாண்புமிகு அமைச்சர் ஒரு கல்லூரி விழாவினில் மேடையிலேயே பேராசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் யூனியன் ஸ்டேட்ஸ் என்பதற்கு தெளிவான விளக்கத்தினை கூறி நமது மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து எல்லோருக்கும் புரிய வைத்தார்.


Anantharaman Srinivasan
நவ 15, 2024 20:42

வெட்ட வேண்டியதை தாசில்தாருக்கும் கிராம நிர்வாக அதிகாரிக்கும் கொடுக்காமல் பட்டாவா.. ? திமுக சரித்திரத்திலேயே கிடையாதே. மேடையில் சும்மா ஷோ காட்டுகிறார் மந்திரி.


GMM
நவ 15, 2024 20:05

பட்டா மிக முக்கிய ஆவணம். மந்திரி நினைப்பது போல் அது குழந்தை பறக்க விடும் பட்டம் அல்ல. கட்சி அரசியல்வாதிகள் வாக்கு பெற மிரட்டுவர் . கட்சி செலவில் கிரயம் பண்ணி , பத்திர பதிவு செய்து கொடுக்க வேண்டும். முடியுமா? எதன் அடிப்படையில் பட்டா கொடுக்க கை நீட்டுகிறர் மந்திரி. ? நில அருமை அரசுக்கு எதிர்காலத்தில் தெரியும். மிரட்டலுக்கு காரணம் உச்ச மன்ற குற்றவாளிக்கு சாதக உத்தரவு.? நீதிபதி பணி ஓய்வு பெற்றாலும் , தவறான தீர்வு மீது சில காலம் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசின் தாமத முடிவு பின் விளைவுகளை நாட்டில் அதிகரிக்கும்.


கட்டத்தேவன்,,திருச்சுழி
நவ 15, 2024 20:28

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருதுல்ல அதனால இந்த திமுக அமைச்சர்கள் மக்கள் சேவகர்களாக உருமாறி விடுவார்கள் இனி இந்த மாதிரி நடிப்புக் காட்சிகளை நாம் அடிக்கடி காணலாம்.


Smba
நவ 15, 2024 20:01

இந்த கண்டிப்பு தேவைதான் எல்லா இடத்திலும்


புதிய வீடியோ