உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாமதத்திற்கு அமைச்சர் பதில்

ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாமதத்திற்கு அமைச்சர் பதில்

சென்னை: ''தமிழகத்தில், 11,049 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளதால், புதிதாக துவங்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிர மணியம் கூறினார். சட்டசபையில் அவர் கூறியதாவது: பல்வேறு இடங்களில் செவிலியர் பயிற்சி பள்ளி, கல்லுாரி துவங்க, மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் பரிசீலிக்கப்படும். பலரும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என கேட்கின்றனர். இதுகுறித்து, மத்திய அரசிடம் கேட்டபோது, தமிழகத்தில், 11,049 ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. வடமாநிலங்களில் இதில் பாதி கூட இல்லை. எனவே, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க, பின்னர் அனுமதி தருவதாக சொல்கின்றனர். இதுபோதாதென்று, 709 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் நிறுவப்பட்டு உள்ளன. பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் தமிழகத்தில் உருவாகியுள்ளன. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன், எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ