உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலை எந்த அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் இ.பி.எஸ்! செந்தில் பாலாஜி விமர்சனம்

அரசியலை எந்த அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் இ.பி.எஸ்! செந்தில் பாலாஜி விமர்சனம்

சென்னை; அரசியலை எந்த அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் இ.பி.எஸ்., என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட இ.பி.எஸ்., அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார். இ.பி.எஸ்., தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழகத்தையே பா.ஜ.,விடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர். புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Haja Kuthubdeen
ஜன 22, 2025 17:12

ரொம்ப யோக்கியன் ...அரசியல் பத்தி பாடம் நடத்துறார்....


Balaa
ஜன 22, 2025 15:59

அடாடா, இந்த ஆதிசங்கரர் சொல்வதை கேளுங்கப்பா....


Balamurugan
ஜன 22, 2025 13:13

நீ திருடன் வாயே தொறக்க கூடாது.


Balamurugan
ஜன 22, 2025 13:12

அதை நீ சொல்ல தகுதி இல்லை.


S.L.Narasimman
ஜன 22, 2025 12:36

இந்த குற்றவாளி ரொம்ப நல்லவன் போல் அறிக்கை விடுவது கேலி கூத்து.


Ramesh Sargam
ஜன 22, 2025 11:59

இந்த செந்தில் சிறையிலிருந்து வந்த சில நாட்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தான். நாட்கள் போகப்போக தன்னுடைய சுயரூபத்தை காண்பிக்கிறான். ஆமாம், இவன் மீது பதியப்பட்ட வழக்குகள் முடிந்தனவா? இல்லையென்றால் தூசிதட்டி எடுக்கவும். மீண்டும் இவனுக்கு சிறை வாசலை காண்பிக்கவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை