உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை; அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை

ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை; அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை

சென்னை : ''தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு, 100 அடியில் சிலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - வைத்திலிங்கம்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், 1972ம் ஆண்டு ராஜராஜ சோழனுக்கு அப்போதைய முதல்வர் சிலை வைக்க முயன்றார். தொல்லியல் துறை அனுமதி கிடைக்காததால், கோவிலுக்கு வெளியே சிலை வைக்கப்பட்டது. மாமன்னன் ராஜராஜ சோழன் கப்பல் படையை உருவாக்கியவர். இந்திய கடற்படைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூரில், 216 அடி உயரத்தில் கோவில் கட்டிய அவருக்கு, 100 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும். ஹிந்து அறநிலையத் துறையால் அமைக்க முடியாவிட்டாலும், அரசு சிலை அமைத்துத்தர வேண்டும்.அமைச்சர் சேகர்பாபு: ராஜராஜ சோழனுக்கு ஆயிரம் ஆண்டு சதய விழா எடுத்தவர் கருணாநிதி. சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு நிச்சயம் வாய்ப்பிருந்தால், சிலை வைப்பதற்கு அறநிலையத் துறை பணிகளை மேற்கொள்ளும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மார் 26, 2025 09:41

ராஜ் ராஜ் சோழன் ....தமிழக சாக்கிரவர்தி ..இவரின் புகழ் பரப்ப சிலை வேண்டாம் ... தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், லாவோஸ், சிங்கப்பூர் நாடுகளில் பல்கலைக்கழத்தில் தமிழில் இவரின் பெயரால் ஒரு இருக்கை ஆரம்பித்து அன்றைய தமிழ் நாட்டு வணிகர் வியாபாரம் , அன்றய கப்பல்களின் தொழில் உட்பம். பூம்புகார் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் வெளிநாட்டு யிலானார்கள் தமிழக ராஜ ராஜ சோழனைப்பற்றி யம் அவரது வீரதீர செயல்களை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.


சமீபத்திய செய்தி