உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தற்கொலைகள் குறைவு அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம்

தமிழகத்தில் தற்கொலைகள் குறைவு அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை: “தமிழகத்தில் அரசின் பல்வேறு நடவடிக்கையால், தற்கொலை செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எலியட்ஸ் கடற்கரையில், 'உலக தற்கொலை தடுப்பு வாரம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது, அவர் அளித்த பேட்டி: விற்பனைக்கு தடை தமிழகத்தில் அதிகபட்சமாக, 2021ம் ஆண்டில், கொரோனா காலத்தில், 19,000 பேர் வரை தற்கொலை செய்து கொண்டனர். அப்போது, தொழிலில் தோல்வி, கல்வி கற்க இயலாமை, வறுமை போன்ற காரணங்களால், தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, தற்கொலையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, சானிப்பவுடர், எலி மருந்து ஆகியவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது . தற்கொலை செய்து கொள்வோரில், பெரும்பாலானோர் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருந்ததால், 'மனம்' என்ற மனநல சேவைகள் அமைப்பு துவக்கப்பட்டது . இதன் வாயிலாக, மருத்துவம், பொறியியல் மற்றும் கலை கல்லுாரி மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆலோசனை அத்துடன், 'நட்புடன் உங்களோடு' என்ற மனநல சேவை எண் '14416' வாயிலாகவும், மன ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், 1.50 லட்சம் பேர் தொடர்பு கொண்டு பயன் பெற்றுள்ளனர். 'நீட்' தேர்வு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் என, அனைவருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, 2021க்கு பின், தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

angbu ganesh
செப் 15, 2025 09:46

நாங்கதான் உங்கள தேர்ந்தெடுத்து ஒரு முறை தற்கொலை செய்து கொண்டோமே


Vasan
செப் 15, 2025 09:37

தற்கொலை செய்யக்கூட தைரியம் வேண்டும். அந்த அளவுக்கு கோழை ஆக்கி விட்டீர்கள் ஐயா.


Sowmiyan
செப் 15, 2025 09:23

சிறுநீரக திருட்டில் எத்தனையாவது இடம் என்று சொல்லுங்கள் அமைச்சரே இர்ஃபான் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் சுப்பன் குப்பன் என்றால் சட்டம் கடமையை செய்யுமோ?


duruvasar
செப் 15, 2025 08:36

ஆள் வைத்து கொல்வது அதிகம் ஆயீடுச்சே சார் .


RAJ
செப் 15, 2025 08:19

அந்த சாறை அரெஸ்ட் பண்ண தற்கொலைகள் கண்டிப்பாக குறையும்...


Vasan
செப் 15, 2025 09:34

யார் அந்த சார்?


Raj
செப் 15, 2025 07:26

மீடியாக்களிடம் சொல்லி இருக்கலாம் தற்கொலை செய்திகளை போடக்கூடாது என்று.


Vasan
செப் 15, 2025 05:53

Murders converted as Suicides are more in Tamilnadu. Regards Anna Nagar Ramesh and family members.


Mani . V
செப் 15, 2025 05:17

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும். இரண்டு நாள் முன்பு வந்த அறிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறதாம் திமிங்கிலம். ஒருவேளை டாஸ்மாக் புண்ணியத்தில் ஏற்படும் மரணங்களை சார் இயற்கை மரணத்தில் சேர்த்து இருப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை