உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நிலஅபகரிப்பு வழக்கு: ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நிலஅபகரிப்பு வழக்கு: ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை மேயராக இருந்த காலத்தில், போலி ஆவணங்கள் மூலம் மனைவி காஞ்சனா பெயருக்கு அப்போது மேயராகவும், இப்போது அமைச்சராகவும் இருக்கிற மா.சுப்பிரமணியன் மாற்றம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9hyyfmlc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்திருந்தார். குடியிருப்பை வாங்கியதில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று வாதிடப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, விசாரணையை தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு அவர் ஆணையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAM IYER
மார் 28, 2025 17:04

How they are expecting to close the cases?? doing everything Cheatings


Perumal Pillai
மார் 28, 2025 15:55

ரொம்ப நேர்மையுடன் விசாரிப்பார்கள் கடைசியில் ஒன்றும் இல்லை என நேர்மையாக விட்டு விடுவார்கள் . நீதி வெல்லும். சார் குத்தமற்றவர் . இதுதானே நடைமுறை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை