உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மன்னிப்பு கோரினார் அமைச்சர் விஸ்வநாதன்

 மன்னிப்பு கோரினார் அமைச்சர் விஸ்வநாதன்

சென்னை: ''மாணவர்கள் போராட்டத்தில், அரசியல் கட்சிகள் உள்ளனவா என கண்டறிய சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - செல்லசாமி: மாநகராட்சிகள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் நிதி அளிக்க வேண்டும். மாணவர்கள் போராட்டத்தில் அரசியல் கட்சி தலையீடு இருப்பதாக கூறிய அதிகாரிகள் மீது, அக்கட்சிகள் தொடர்பாக அறிக்கை கேட்டு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் விஸ்வநாதன்: கம்யூனிஸ்ட் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில், அதற்கு பொறுப்பேற்கிறேன்; அதற்காக மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி