உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அவசியம் அமைச்சர் பேச்சு

1.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அவசியம் அமைச்சர் பேச்சு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து, 'இண்டி' கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. எம்.பி., அந்தியூர் செல்வராஜ் தலைமை வகித்து, தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை அறிமுகம் செய்தார். இதில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: ஈரோடு கிழக்கில் தி.மு.க., போட்டியிட காங்கிரஸ் இடம் கொடுத்துள்ளது. தி.மு.க.,வில் சந்திரகுமார், மாவட்ட துணை செயலர்கள் செந்தில்குமார், செல்லபொன்னி, குறிஞ்சி சிவகுமார் வாய்ப்பு கேட்டனர். நால்வரும் தகுதியானவர்கள் என்பதால், யாரை முடிவு செய்வது என்பதில் முதல்வரே ஒரு நாள் தாமதமாகவே அறிவித்தார். சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்து, மற்றவர்களை பணி செய்ய கேட்டுக் கொண்டார்.கடந்த தேர்தலில், 66,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றோம். அத்தேர்தலுக்கு பின், முதல்வர் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளதால், 1.20 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பணி செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் விதிமீறாமல் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேளுங்கள். தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரகுமார், வரும் 17ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வார். இவ்வாறு முத்துசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை