சிறுபான்மையினர் நலத்துறை விவாதம் 29ம் தேதிக்கு மாற்றம்
சென்னை:''நாளை நடக்கவிருந்த பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், வரும் 29ம் தேதி நடக்கும்,'' என, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்பு:நாளை சனிக்கிழமை நடக்கவிருந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், வரும் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை நடக்கும். வரும் 29ம் தேதி நடக்கவிருந்த சட்டசபை, கவர்னர், அமைச்சரவை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், நிதித்துறை, ஓய்வூதியங்கள், பொதுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், நாளை நடக்கும்.ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதமும் நாளை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.மறைந்த கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவர் போப் பிரான்ஸ் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், இத்தாலியின் வாடிகன் சென்றுள்ளார். எனவே, நாளை நடப்பதாக இருந்த அவரது துறை மானிய கோரிக்கை விவாதம், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.