உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாயமான நர்ஸ் சடலமாக மீட்பு

மாயமான நர்ஸ் சடலமாக மீட்பு

பெருந்துறை: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியை சேர்ந்த ராமையா மகன் ரஞ்சித் குமார், 27, கட்டுமான தொழிலாளி. இவரது அத்தை மகள் உத்திரா, 26; நர்சிங் படித்தவர். இருவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகைக்கு வீட்டில் வசிக்கின்றனர். ரஞ்சித்குமார் கட்டட வேலைக்கு சென்றார். உத்திரா அதே பகுதியில் தனியார் மருத்துவமனையில் கடந்த, 3ம் தேதி தேதி முதல் நர்சாக வேலை பார்த்தார். காலையில் ரஞ்சித்குமார் வேலைக்கு செல்லும்போது, மனைவியை மருத்துவமனையில் விட்டு செல்வார். இரவு திரும்ப அழைத்து செல்வார். கடந்த, 14ம் தேதி மனைவியை அழைக்க ரஞ்சித்குமார் மருத்துவமனைக்கு சென்றார். இரவு, 7:15 மணிக்கே அவர் சென்று விட்டதாக கூறவே வீட்டுக்கு சென்றார். ஆனால், வீட்டில் மனைவி இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், ஊத்துக்குளி போலீசில், 15ம் தேதி புகாரளித்த நிலையில், போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகில், பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் ஒரு காட்டில், இளம்பெண் சடலம் நிர்வாண நிலையில் கிடப்பதாக, பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்ற நிலையில் அழுகிய நிலையில் சடலம் இருந்தது. அதேசயமம் உடலின் மீது கிடந்த சிம்மிஸ், அருகில் கிடந்த செருப்பை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், காணமால் போன நர்ஸ் உத்திரா என்பது தெரிய வந்தது. வீட்டுக்கு செல்லும் வழியில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivaagiri
அக் 18, 2026 16:35

புருஷன் வரும் முன்னேமேயே , ஏன் கிளம்பி போனார் , ? விட்டில் பூச்சிகளாக பெண்கள் , மோசம் போகிறார்கள் ? ஸ்கூல் பிள்ளைகளுக்கு , பேட் டச் , குட் டச் , சொல்லிக் கொடுப்பது போல , வயசு பெண்களுக்கு , வேலை செய்யும் இடங்களில் , வலைத்தளங்களில் , பொது இடங்களில் , ஆண்களின் , நல்ல விதமான பேச்சுக்கள், நயவஞ்சக பேச்சுக்கள் , என்று பிரித்து பார்க்க ஏதாவது பிரச்சாரம் முன்னெடுக்க வேண்டியது ,...


Mohan
அக் 18, 2026 15:05

""""அரபு நாடுகள் போல தண்டனை தர வேண்டும்""" என்று கருத்து எழுதும் நபர்களுக்கு அரபு நாடுகளில் எந்த மாதிரி சட்டம் என்று தெரியுமா ???.அதை செயல் படுத்துபவர் யார் என்று தெரியுமா?? அரபு நாடுகளில் ஷரியா சட்டம், மத சட்டம் மற்ற நாடுகளைப் போல பொது சிவில் சட்டம் அல்ல. மதகுருமார்களான மெளலவிகள் குற்றங்களையும் குற்றவாளிகளையும் தங்களது மனதில் தோன்றிய வண்ணம் வகைப்படுத்தி தண்டனை அறிவிக்கின்றனர். அரந்த மாதிரி அரபு நீதிமன்றம் வந்தால் மனிதநேயம் மறைந்து, இஸ்லாம் தான் பெரிதாகும்.மதத்தையும் மதத்தலைவரையும் பற்றி யாரோ கமெண்ட் அடித்ததை சமுக வலைதளத்தில் சரியாக புரியாமல் பகிர்ந்த ஸ்ரீலங்காவை சேர்ந்த தமிழருக்கு மரண தண்டனை தந்தது அரபு நீதிபதி தான். ஆகவே உலகம் முழுவதும் உள்ள,பொது சட்ட நடைமுறையே நாம் அமல் படுத்த வேண்டும். ஆனால் வழக்கறிஞர்கள் நமது சட்ட நடைமுறையை அரித்து வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும்.


Barakat Ali
அக் 18, 2026 09:39

ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான் .....


சந்திரசேகர்
அக் 18, 2026 08:45

கொலை குற்றவாளிகளுக்கு சாதகமாக வக்கீலும் ஜாமீனும் தண்டனை மிக குறைந்த அளவில் இருப்பதால் யாரும் கொலை செய்வதற்கு பயப்படவில்லை. கொலை யெல்லாம் இப்போது சஜமாகி விட்டது. அப்புறம் ஒரு கொலை குற்றவாளியை அவன்தான் கொலை செய்தான் என்பதை நிருபிக்க இருபது வருடங்கள் ஆகும்


thiruvidaimaruthur sivakumar
அக் 18, 2026 10:50

அரபு நாடுகள் போல தண்டனையை அமல் படுத்தினால் மட்டுமே பயம் இருக்கும்.


சமீபத்திய செய்தி