மேலும் செய்திகள்
30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
25-Aug-2024
சென்னை:'தமிழகத்தில் இன்று முதல் 27ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன் இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிக்கை:மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் 27ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவானது. தென்மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவியது.அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லுாரில், 17 செ.மீ., மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் சத்யபாமா பல்கலையில் 9; தாம்பரத்தில் 6; ஸ்ரீபெரும்புதுாரில் 5; சென்னை அண்ணா பல்கலை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 4 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
25-Aug-2024