உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) முதல் வரும் நவம்பர் 4ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்., 30) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்திற்கு, வடக்கு-வடமேற்கு திசையில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக நகரக்கூடும்.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) முதல் வரும் நவம்பர் 4ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடகா - குஜராத்-கொங்கன் - கோவா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு - வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Chandru
அக் 30, 2025 20:03

மழை வரும் ஆனா வராது . இப்படி சொல்வதற்கு ஒரு மத்திய அரசு அலுவலகம் .


sankar
அக் 30, 2025 16:34

மாடல் மைண்ட்வாய்ஸ் - புயல் மாறிப்போயி பொழப்ப கெடுத்துருச்சே - ஆயிரம் கோடி ஆட்டைய போட்ருக்கலாமே


sundarsvpr
அக் 30, 2025 16:02

குடியிருப்போர் எல்லோர் வீட்டிலும் கிணறு இருக்கும். வீட்டு கிணறை தூர் எடுப்பார்கள் என்பதனை மறக்கக்கூடாது.ஊற்று அடைக்கப்படாது. நீர் ஊரும். எல்லோர் வயல்களிலும் கிணறுகள் உண்டு இப்போது எல்லாவற்றையும் மூடிவிட்டார்கள். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போதிய மழை இல்லாவிடில் இந்த கிணறுகளில் நீர் ஊரும். அவசர தேவைக்கு பயன்படும் மழையை பற்றி வானிலை மையம் முன் கூட்டி தெரிவிப்பது நோக்கம் என்ன என்பது புரியாத புதிர். ஒவ்வொரு வீட்டு வாசல்களில் வாய்க்கால் இருக்கும் மழை தண்ணீர் ஓடும் இதில் கப்பல் விட்டு குழந்தைகள் மகிழும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை