உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வை விமர்சிக்காத மோடி!

அ.தி.மு.க.,வை விமர்சிக்காத மோடி!

'என் மண்; என் மக்கள்' யாத்திரையில் பேசிய பிரதமர் மோடி, அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல்,எம்.ஜி.ஆர்., - ஜெ.,வை புகழ்ந்து பேசினார்.தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., வெளியேறியது. ஆனாலும், நேற்று பல்லடத்தில் பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, அ.தி.மு.க.,வை விமர்சிக்கவில்லை; மாறாக, எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தார். அதே நேரம், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kgl8mt42&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'அ.தி.மு.க.,வில் பிரிந்துக் கிடக்கும் அணிகளை ஒருங்கிணைக்க, பா.ஜ., தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், பழனிசாமி அணியினர் ஒருங்கிணைய தயாராக இல்லை. எனவே, பழனிசாமி அணியினர் மீது பா.ஜ.,வினர் அதிருப்தியில் உள்ளனர். அதன் எதிரொலி தான், நேற்றைய கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சை பார்க்க வேண்டியிருக்கிறது.'எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான், அ.தி.மு.க.,வை திறம்பட நடத்தினார்கள் என சுட்டிக்காட்டிய மோடி, பழனிசாமி பெயரை குறிப்பிடவில்லை. பழனிசாமி அணியில் அதிருப்தியில் உள்ளவர்களை, பா.ஜ., பக்கம் இழுக்கும் முயற்சியாக கூட இது, இருக்கலாம்' என்கின்றனர்அரசியல் நோக்கர்கள்.

நீடிக்கும் 'சஸ்பென்ஸ்!'

பல்லடத்தில் நடக்கும் கூட்டத்தில், அ.தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 'சிட்டிங்' மற்றும் 'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள் பலரும், பா.ஜ.,வில் இணைய இருப்பதாக, கடந்த இரு நாட்களாக தகவல் வைரலானது. ஒவ்வொரு ஊரில் உள்ள மாற்றுக்கட்சி வி.ஐ.பி.,க்களின் பெயர் அடிபட, அது, மக்கள் மத்தியில் பரபரப்பு பேச்சாக மாறியது. இருப்பினும், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. இதனால், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை