உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!

வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்'' என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து தனக்கு வரும் தலைவர்களின் கடிதங்களில் ஆங்கிலத்தில் கையெழுத்து இருப்பதாக பிரதமர் மோடி பேசி இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து துறை செயலாளர்கள், கலெக்டர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:* தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும்.* துறை தலைமை அலுவலகங்களில் இருந்து, பிற அலுவலகங்களுக்குச் செல்லும் கருத்துரைகளும் தமிழில் இருக்க வேண்டும்.* பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும்; அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில், ''எனக்கு சில தலைவர்கள் தமிழகத்தில் இருந்து கடிதம் எழுதுவது ஆங்கிலத்தில் இருக்கும். கையெழுத்து கூட ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். தமிழ் மொழியில் போடக்கூடாதா என, நான் வியப்பதுண்டு'' என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

ranjani
ஏப் 16, 2025 22:36

டமில் டெறியாடு போடா


Padmasridharan
ஏப் 16, 2025 20:58

"தமிழ் பற்று".. வெறும் பேச்சில் புளியோதரை செய்பவர்களுக்கு செயலில் காட்டச்சொல்லி இருக்கிறார்.


spr
ஏப் 16, 2025 18:39

மத்திய அரசு அதிகாரிகளுக்கு இந்தியை விட்டால் அரைகுறை ஆங்கில அறிவே எனும் நிலையில் தமிழக அரசின் கோரிக்கைகளை புறக்கணிக்க அவை மொழிமாற்றம் செய்து அனுப்ப அறிவுறுத்தப்படும் அதனால் கால தாமதம் செலவு இவற்றோடு மொழி மாற்றம் செய்யும் போது சட்டச் சிக்கல் வரலாம் ஆகப் போகாத ஊருக்கு வழி என்னே மோடியின் ராஜ தந்திரம் புரிந்து கொள்ளாத தமிழக முதல்வர். மத்திய அரசின் அனைத்துக் கருத்துக் பரிமாற்றங்களும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மாற்றத்துடன் இருக்க வேண்டுமென்றும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலம் மத்திய இதர மாநில பன்னாட்டு கருத்துக் பரிமாற்றத்திற்கு என்றும், மானிலத்தின் ஆட்சி நிர்வாகத்திற்குத் தமிழ் என்றும் சொல்லி, மத்திய அரசுடன் ஆங்கில மூலத்துடன் தமிழில் கடிதப் பரிமாற்றம் இருக்கும் என்று சொல்லத் தெரியவில்லையே.


என்றும் இந்தியன்
ஏப் 16, 2025 17:55

ஓங்கோல் தெலுங்கருக்கு தமிழ் தெரியுமா என்ற சந்தேகத்தில் தான் அதை அவர் சொல்லியிருப்பார்


Oviya Vijay
ஏப் 16, 2025 16:01

அப்படி சொன்ன நம்ம ஜீயே அதை ஃபாலோ பண்ணலியாம்... தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லி போட்ட பதிவுல கூட அவரோட கையெழுத்து அவரோட தாய்மொழி குஜராத்தில இல்லாம ஹிந்தில தான் இருந்திச்சி... சும்மா... ஊருக்கு தான் உபதேசம்... வேற ஒன்னதுக்கும் பிரயோஜனம் இல்லை...


vivek
ஏப் 16, 2025 17:43

ஒரே கிருக்கல இருக்கு ஆர்டிஸ்ட்... எப்பவுமே நேரா கருத்து போடாது...


vivek
ஏப் 16, 2025 17:45

நீ போட்ட உன் பேரு இங்கிலீஷ் தமிழா ஆர்டிஸ்ட்??


அப்பாவி
ஏப் 16, 2025 15:02

இனிமே ஒன்றியத்துடனான எல்லா கடிதப் போக்குவரத்தும் தமிழில்தான் இருக்கணும்.


Velan Iyengaar, Sydney
ஏப் 16, 2025 14:41

அப்போ எங்கே அந்த இரும்புக் கரம்...? இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த வெட்டி உதார்...கேவலம்.


N S
ஏப் 16, 2025 14:30

மிக்க நன்று. முதல்வரின் கையொப்பம் காண ஆவலுடன் தமிழகம் உள்ளது.


saiprakash
ஏப் 16, 2025 13:43

திமுக அரசை பார்த்தாலே எரியும்


sankaranarayanan
ஏப் 16, 2025 13:03

அப்போ தலைநகர் டில்லியிலிருந்து எல்லா தகவல்களும் ஹிந்தியில்தான் இருக்கும் பரவாயில்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை