உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - நாகர்கோவில் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் மோடி

சென்னை - நாகர்கோவில் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி வரும் 31ம் தேதி துவங்கி வைக்கிறார். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பணியாளர் நலன் அதிகாரி ஹரி கிருஷ்ணன், முதன்மை நிதி ஆலோசகர் மாலாபிகா கோஷ் மோகன் கூறியதாவது:சென்னை - - நாகர்கோவில் இடையேயும், மதுரை -- பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் துவங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்கெல்லாம் நிற்கும்

பெங்களூரில் வரும் 31ம் தேதி நடக்கும் விழாவில், காணொளி வாயிலாக வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் துவங்கி வைக்க உள்ளார். எழும்பூரில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:50க்கு நாகர்கோவிலுக்கு செல்லும். நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:20க்கு புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு எழும்பூர் வரும்.இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலியில் நின்று செல்லும். மதுரையில் இருந்து காலை, 5:15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:00க்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து மதியம் 1:30க்கு புறப்படும் ரயில், இரவு 9:45க்கு மதுரை சென்றடையும். இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும்.

'2 மாதத்தில் முடியும்'

சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறுகையில், ''சென்னை கடற்கரை -- எழும்பூர் 4வது புதிய பாதை அமைக்கும் பணி, ஒரு ஆண்டாக நடக்கிறது. நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னையால் பணியில் தாமதம் ஏற்பட்டது. அனைத்து பணிகளையும் வரும் அக்டோபரில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரம்பூரில், 4வது ரயில் முனையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஓராண்டாகும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அபிஷேக்ராம்ஜி
ஆக 28, 2024 12:06

வீர சிவாசி வாழ்க.


ஆரூர் ரங்
ஆக 28, 2024 11:41

ஏழைகளுக்குக் கட்டுப்படியாகாது, பயன்படாது என்பதால் விமான சேவைகளை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக கட்டைவண்டி சேவைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் வந்தேபாரத்தும் வேண்டாம். .


M.S.Jayagopal
ஆக 28, 2024 11:02

வசதியான ரயில்கள் தேவையே. அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில், நஷ்டத்தில் இயங்கும் வழித்தட ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. மேலும் புதிய ரயில்கள் விட தேவைப்படும் நிதிக்கு, லாபம் ஈட்டும் வசதியான மற்றும் விரைவான ரயில்கள் உதவுகின்றன.


D Janakiraman
ஆக 28, 2024 10:03

Madurai to Bangalore train should start from Madurai at 6 a.m, to facilitate passengers, coming from far off places.


D Janakiraman
ஆக 28, 2024 09:59

மதுரையில் இருந்து கிளம்பும் ரயில் காலை 6மணிக்கு மேல் கிளம்பினால் நகருக்கு வெளியே இருந்து வரும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.


பாமரன்
ஆக 28, 2024 08:53

மாநில அரசு அத்திக்கடவு மாதிரி ஏழைபாழைகளுக்கு திட்டத்தை ஆயிரக்கணக்கான கோடி தன் செலவில் செஞ்சு நிறைவேற்றுது... நம் பிரதமர் வெறுமனே டிங்கரிங் மேக்கப் செய்து வசதியானவர்கள் மட்டுமே பயனடைய சில கோடிகள் செலவில் உருவான ரயிலுக்கு இன்னும் கொடியாட்டிக்கிட்டு இருக்காப்ல... மாநில அரசு செஞ்சது மக்கள் நல திட்டம்... மத்திய அரசு செய்வது வருமானத்துக்கான வழி... எவ்ளோ வித்தியாசம்... ஆனாலும் பகோடாஸ்... டீம்கா ஒயிக...


அப்பாவி
ஆக 28, 2024 07:44

திரும்ப ஆரம்பிச்சுட்டாங்ய்யா...


Kasimani Baskaran
ஆக 28, 2024 05:26

சிறப்பு. புல்லட் ரயில் வந்தால் மூன்று மணி நேரத்தில் இந்தத்தூரத்தை கடக்கலாம். பெரிய அளவில் உட்கட்டமைப்புக்கு செலவு செய்தால் நன்றாக இருக்கும்.


பாமரன்
ஆக 28, 2024 09:16

நம்ம காசி எப்பவுமே தமாஷ் பண்ணுவாப்ல... அவர் சப்பான்காரண்ட்ட வேலை பார்த்துட்டு சிங்கப்பூரில் கீறாப்ல... அங்கெல்லாம் இல்லாத ஒன்று / முடியாத ஒன்று இங்கு எதிரிகட்சி மாநிலத்தில் மட்டுமே வரனும்னு செம்த்தியா காமெடியா பேசுவாப்ல... ஹைய்யோ ஹைய்யோ...


அத்வைத்
ஆக 28, 2024 09:55

சிங்கப்பூரில் ரயிலு உண்டா காசி?


முக்கிய வீடியோ