உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லூரியில் பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜர்

கல்லூரியில் பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு, கல்லூரியில், அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இன்று (ஜன.,22) கதிர் ஆனந்த் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.தி.மு.க., பொதுச்செயலராகவும், அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த்; வேலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யாக இருக்கிறார். அந்த தொகுதியில், 2019ல் கதிர் ஆனந்த் போட்டியிட்ட போது, தன் பெயரிலும், மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோர் பெயரிலும், 88.80 கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் இருப்பதாக, வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார். கதிர் ஆனந்த் எம்.பி.,யானதில் இருந்து, அவரின் மனைவி, மகள்கள் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகமாகி இருப்பதையும் கண்டறிந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fhlbcwy6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சில தினங்களுக்கு முன், காட்பாடி காந்தி நகரில் உள்ள கதிர் ஆனந்த் வீடு மற்றும் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், 44 மணி நேரம் சோதனை நடத்தினர். இச்சோதனையில், கதிர் ஆனந்த் கல்லுாரியில் இருந்து, 13.07 கோடி ரொக்கம் மற்றும் வீட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தை உடைத்து, அங்கிருந்த, 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சொத்து ஆவணங்கள் மற்றும், 'டிஜிட்டல்' ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த பணம் குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (ஜன.,22) விசாரணைக்கு ஆஜராகும்படி கதிர் ஆனந்திற்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு இருந்தது. நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (ஜன.,22) கதிர் ஆனந்த் நேரில் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

c.Natarajan
ஜன 23, 2025 11:29

ஆரம்பம் முதல் அவரது வருமானத்தை அலசவேண்டும். தவறாக சம்பாதித்தது அத்தனையும் பறிமுதல் செய்யவேண்டும்.


Ramar P P
ஜன 23, 2025 09:38

எந்த அரசியல்வாதியாவது இதுவரை தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் உண்டா


தமிழ்வேள்
ஜன 22, 2025 15:57

ஈரோட்டு ஈரவெங்காயனார் வழிவந்த பகுத்தறிவு செம்மலுக்கு , நெற்றியில் என்ன காயமா ? ரத்தம் வருவது போல உள்ளதே ?


Venkatesan
ஜன 22, 2025 14:33

என்ன கைப்பற்றினால் கால் பற்றி தப்பிப்பது தீம்காவுக்கு கை வந்த கலை. இது கலை காலத்துலேர்ந்தே எடுக்கப்பட்ட நிலை .


Sridhar
ஜன 22, 2025 14:22

செந்தில் பாலாஜியும் பொன்முடியும் சுதந்திரமா சுத்திட்டு இருக்கறத பாக்கும்போது, இந்த ரைடு விசாரணை இவை மீதெல்லாம் உள்ள மரியாதையே சுத்தமா போயிடிச்சு. க்ரிப்டோலயும் ஹவாலாவிலையும் மிக சுலபமா பணப்பரிமாற்றம் செஞ்சிட்டு இருக்கறவங்கள்ட்ட போயி சும்மா விட்டுப்போன தம்மாதூடு 12 கோடி பிடிச்சிட்டோம்னு மார்தட்டினா, அத நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பானுங்க. என்ன ஒரு நேர விரயம்? அரசாங்கமா நடக்குது? மக்கள் பணத்துல எல்லா வசதிகளையும் அனுபவிச்சிக்கிட்டு பிரதமர் மந்திரினு சும்மா ஒக்காந்திருக்காங்க


Kasimani Baskaran
ஜன 22, 2025 14:03

அம்பானி, அதானி என்று உருட்டும் எந்த உடன் பிறப்பும் இதற்க்கு பதிவு போடாது. அப்படி போட்டால் 300 ஓவா கிடைக்காது - கூடுதலாக தள்ளி வைத்து விடுவார்கள். அதன் பின்னர் சிங்கள் டீ க்கு கூட சிங்கி அடிக்கத்தான் வேண்டும்...


sankaranarayanan
ஜன 22, 2025 13:30

யானறியேன் பராபரமே நான் எப்போதும் கோபாலபுரத்து விசுவாசியாகவே இருப்பேன் என்று சொன்னவரின் மைந்தன் எப்படிப்பட்டவர் என்பதுக்கு நன்றாவே மக்களுக்கு புரிந்துவிட்டது என்ன நாடகமடா இது. கல்லூரியிலிருந்து விரைவில் இவர் ஒரு சர்வ பல்கலைக்கழகம் ஆரம்பிக்க ஆகும் பணம் இவருக்கு இருக்கிறது எப்படி வந்தது யானறியேன் பராபரமே . மக்களே புரிந்துகொள்ளுங்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 12:58

கிம்ச்சை மன்னரை தேர்தல் சமயத்துல தொட்டுப்பார்க்க, தடவிப் பார்க்க ஒன்றியத்துக்கு ஐடியா இருக்குமோ ????


Oru Indiyan
ஜன 22, 2025 12:30

ஒரு இளவரசன் கேட்டது ஞாபகம் வருகிறது..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 12:25

பதிமூணு கோடி ஒருநாள் டீ செலவு.. கட்டிங் மூலமா கொஞ்சம் லாஸ் ஆகும்... அதையெல்லாம் பிஸினஸ்ல எடுத்துக்கலாம் ......


புதிய வீடியோ