வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எந்தக்கொம்பனும் விஷயம் தெரிந்த அதிகாரிகளுக்கு இப்படி உத்தரவிட முடியாது .....
மேலும் செய்திகள்
முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம்
30-Nov-2024
சென்னை: 'அணைகளின் நீர் இருப்பை காண்காணிக்க வேண்டும். அணைகளில் இருந்து நீரினை திறந்து விடும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும்' என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், நேற்று அடைமழை வெளுத்து வாங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர்கள் உடன் நேற்று (டிச.,13) முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்து தேவையான அறிவுரைகளை வழங்கினார். இந்நிலையில், இன்று (டிச.,14) முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும். அணைகளிலிருந்து நீரினை திறந்துவிடும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்க வேண்டும். கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் உட்பட அனைத்து சேத விவரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
எந்தக்கொம்பனும் விஷயம் தெரிந்த அதிகாரிகளுக்கு இப்படி உத்தரவிட முடியாது .....
30-Nov-2024